• Dec 03 2025

சரிந்த நிலம் அழிந்த கிராமங்கள்; பாதிப்பின் கோரத்தை காட்டும் நெஞ்சை உலுக்கும் காட்சி!

shanuja / Dec 2nd 2025, 4:12 pm
image

கேகாலை அலவ்வா–துல்ஹிரியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காட்சிகள் பரந்தளவிலான அழிவைக் காட்டும் பயங்கரமாகப் பதிவாகியுள்ளது. 


நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலின் அழிவுகள் எண்ணக்கணக்கற்றவை. உயிரிழப்புக்கள், மாயமானோர், வீடுகள், வீதிகள், கட்டடங்கள் உள்ளிட்ட பெரும் பாதிப்பை டிட்வா புயல் கொடுத்துள்ளது. 


டிட்வா புயலின் கோரத்தால் அதிகளவில் நிலச்சரிவுகளே பதிவாகின. தீவை சுற்றிப் பார்த்தால் பெருமளவில் நிலச்சரிவுகளே ஏற்பட்டுள்ளன. 


நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையே அதிகமாக பதிவாகியுள்ளது. அதிலும் பிஞ்சுக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த வேளையில் திடீர் திடீரென்று மண்மேடுகள் வீடுகள் மேல் சரிந்து விழுந்தன. 


கட்டடங்கள், வீடுகள் மேல் விழுந்த மண்மேடுகளால் உயிரிழப்பு மட்டுமன்றி பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டன. 


இந்த நிலையில் கேகாலை அலவ்வா–துல்ஹிரியாவில் ஏற்பட்ட நிலச்சரிவின் அழிவின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 


அதில் சுற்றுமுற்றும் இருந்த வீடுகள் திசை தெரியாமல் மண்ணில் புதைந்து அழிந்து போயுள்ளன. இவ்வாறு தான் டிட்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவின் கோரம் நிகழ்ந்துள்ளது. 


நிலச்சரிவுக் காட்சிகள் வெளியாகி இப்படியும் ஓர் அனர்த்தம் நிகழுமா என்ற ரீதியில் மக்களை பதறவைத்துள்ளது.

சரிந்த நிலம் அழிந்த கிராமங்கள்; பாதிப்பின் கோரத்தை காட்டும் நெஞ்சை உலுக்கும் காட்சி கேகாலை அலவ்வா–துல்ஹிரியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு காட்சிகள் பரந்தளவிலான அழிவைக் காட்டும் பயங்கரமாகப் பதிவாகியுள்ளது. நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலின் அழிவுகள் எண்ணக்கணக்கற்றவை. உயிரிழப்புக்கள், மாயமானோர், வீடுகள், வீதிகள், கட்டடங்கள் உள்ளிட்ட பெரும் பாதிப்பை டிட்வா புயல் கொடுத்துள்ளது. டிட்வா புயலின் கோரத்தால் அதிகளவில் நிலச்சரிவுகளே பதிவாகின. தீவை சுற்றிப் பார்த்தால் பெருமளவில் நிலச்சரிவுகளே ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையே அதிகமாக பதிவாகியுள்ளது. அதிலும் பிஞ்சுக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த வேளையில் திடீர் திடீரென்று மண்மேடுகள் வீடுகள் மேல் சரிந்து விழுந்தன. கட்டடங்கள், வீடுகள் மேல் விழுந்த மண்மேடுகளால் உயிரிழப்பு மட்டுமன்றி பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் கேகாலை அலவ்வா–துல்ஹிரியாவில் ஏற்பட்ட நிலச்சரிவின் அழிவின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் சுற்றுமுற்றும் இருந்த வீடுகள் திசை தெரியாமல் மண்ணில் புதைந்து அழிந்து போயுள்ளன. இவ்வாறு தான் டிட்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவின் கோரம் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவுக் காட்சிகள் வெளியாகி இப்படியும் ஓர் அனர்த்தம் நிகழுமா என்ற ரீதியில் மக்களை பதறவைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement