• Dec 03 2025

A/L பரீட்சையை ஜனவரியில் நடத்துவதற்கு நடவடிக்கை; கல்வி அமைச்சின் செயலாளர்!

shanuja / Dec 2nd 2025, 3:52 pm
image

கல்வி பொது தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026ஆம் ஆண்டு  ஜனவரி தொடக்கத்தில் நடத்தப்படும் என்றுகல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். 


இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி  மீண்டும் திறக்கப்படும்.


பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.


நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தாதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026ஆம் ஆண்டு  ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 


அத்துடன் பாடசாலைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட அளவில் மதிப்பாய்வு செய்து போக்குவரத்து அமைப்பில் ஏற்படும் இடையூறுகள்,  தொடர்பாடல சிக்கல்கள் மற்றும் மின் இழப்புகள் போன்ற் பேரிடர்களுக்கு ஆளாகாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி  ஆரம்பிக்கப்படும் .


ஏனைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பாக மாகாண மற்றும் மனவட்ட அளவில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்வரும் தினங்களில் விலைவான தீர்மானங்கள் எடுக்கப்படும். 


மேலும், பேரிடரால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற்கல்லூரிகள்; மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 08 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். 


ஏதேனும் நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்கும் நிறுவனங்கள் இருப்பின், உரிய நிறுவனத்தின் தலைவருக்கு மீண்டும் தொடங்கப்படும் திகதி குறித்து  முடிவெடுக்கலாம்  என்று தெரிவித்துள்ளார். 

A/L பரீட்சையை ஜனவரியில் நடத்துவதற்கு நடவடிக்கை; கல்வி அமைச்சின் செயலாளர் கல்வி பொது தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026ஆம் ஆண்டு  ஜனவரி தொடக்கத்தில் நடத்தப்படும் என்றுகல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி  மீண்டும் திறக்கப்படும்.பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தாதர பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026ஆம் ஆண்டு  ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் பாடசாலைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட அளவில் மதிப்பாய்வு செய்து போக்குவரத்து அமைப்பில் ஏற்படும் இடையூறுகள்,  தொடர்பாடல சிக்கல்கள் மற்றும் மின் இழப்புகள் போன்ற் பேரிடர்களுக்கு ஆளாகாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி  ஆரம்பிக்கப்படும் .ஏனைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பாக மாகாண மற்றும் மனவட்ட அளவில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்வரும் தினங்களில் விலைவான தீர்மானங்கள் எடுக்கப்படும். மேலும், பேரிடரால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற்கல்லூரிகள்; மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 08 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும். ஏதேனும் நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்கும் நிறுவனங்கள் இருப்பின், உரிய நிறுவனத்தின் தலைவருக்கு மீண்டும் தொடங்கப்படும் திகதி குறித்து  முடிவெடுக்கலாம்  என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement