புயல் தாக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கித் தவிப்போரையும் உயிரிழந்தோரையும் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அயல் நாடுகளின் உதவியுடனும் விமானப்படை, கடற்படை, இராணுவப்படை தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் நாவலப்பிட்டிய தொலஸ்பாக வீதி பரகல மாவட்டத்தில் மண்ணுக்குள் ஏராளமானோர் புதைந்துள்ளனர்.
அவர்களை மீட்கும் முயற்சியில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தனியாகப் போராடி வருகின்றனர்.
அந்தப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்து அதில் 6 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் இறுதியாக சிறுவன் ஒருவரின் உடலை மீட்க முடியாமல் உறவுகள் தவித்துக் கொண்டுள்ளனர்.
வெறும் மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட ஆயுதங்களால் தம்மால் முடிந்தவரையில் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த அவல நிலைக்குள்ளான தமக்கு அரசாங்கமோ அதிகாரிகளோ இதுவரையில் உதவுவதற்கு முன்வரவில்லை என்று தெரிவித்து கதறியுள்ளனர்.
உறவுகளை இழந்து அவர்களின் உடல்களை மீட்க முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவரும் தமக்கு எவ்வாறேனும் யாரேனும் உதவ முன்வர வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்ணுக்குள் புதைந்தோரை மண்வெட்டியால் மீட்கலாமா கண்டுகொள்ளாத அரசு; கதறும் மக்களின் அவலக் காட்சிகள் நாட்டைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலின் கொடூர காட்சிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. புயல் தாக்கத்தால் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கித் தவிப்போரையும் உயிரிழந்தோரையும் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அயல் நாடுகளின் உதவியுடனும் விமானப்படை, கடற்படை, இராணுவப்படை தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்தநிலையில் நாவலப்பிட்டிய தொலஸ்பாக வீதி பரகல மாவட்டத்தில் மண்ணுக்குள் ஏராளமானோர் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தனியாகப் போராடி வருகின்றனர். அந்தப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உயிரிழந்து அதில் 6 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் இறுதியாக சிறுவன் ஒருவரின் உடலை மீட்க முடியாமல் உறவுகள் தவித்துக் கொண்டுள்ளனர். வெறும் மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட ஆயுதங்களால் தம்மால் முடிந்தவரையில் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்டு வருகின்றனர். இந்த அவல நிலைக்குள்ளான தமக்கு அரசாங்கமோ அதிகாரிகளோ இதுவரையில் உதவுவதற்கு முன்வரவில்லை என்று தெரிவித்து கதறியுள்ளனர். உறவுகளை இழந்து அவர்களின் உடல்களை மீட்க முடியாமல் தவிக்கும் ஒவ்வொருவரும் தமக்கு எவ்வாறேனும் யாரேனும் உதவ முன்வர வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.