• Dec 03 2025

இரு துண்டுகளாக பிளவடைந்த வட்டுவாகல் பாலம் - போக்குவரத்தை சீர் செய்யும் பணி தீவிரம்

Chithra / Dec 2nd 2025, 9:13 pm
image


பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.

அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்கின்றது. 

இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து பெரும்பாலும் நாளை மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. 

அதை நோக்கிய வேலைத்திட்டம் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது. 


இரு துண்டுகளாக பிளவடைந்த வட்டுவாகல் பாலம் - போக்குவரத்தை சீர் செய்யும் பணி தீவிரம் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது.அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்கின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து பெரும்பாலும் நாளை மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. அதை நோக்கிய வேலைத்திட்டம் இரவு பகலாக இடம்பெற்று வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement