மகாவலி ஆர் நிரம்பி வழிவதால், கந்தளாய் சூரியபுர தொடக்கம் சேருவில வரையிலான பிரதான வீதி கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது.
இதனால், அல்ல-சேருவில பொலிஸ் நிலையத்திற்கும் சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான முக்கியப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக, கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சூரியபுர, சமகிபுர மற்றும் சமனல பாலம் ஆகிய கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 139 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர்.
இவர்கள் அனைவரும் சூரியபுர மகாவலிபுர வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடம்பெயர்வு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வீதி மூடப்பட்டிருப்பதால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கந்தளாய் - சேருவில பிரதான வீதியில் போக்குவரத்து தடை மகாவலி ஆர் நிரம்பி வழிவதால், கந்தளாய் சூரியபுர தொடக்கம் சேருவில வரையிலான பிரதான வீதி கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால், அல்ல-சேருவில பொலிஸ் நிலையத்திற்கும் சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான முக்கியப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.வெள்ளப் பெருக்கு காரணமாக, கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சூரியபுர, சமகிபுர மற்றும் சமனல பாலம் ஆகிய கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 139 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேர்.இவர்கள் அனைவரும் சூரியபுர மகாவலிபுர வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த இடம்பெயர்வு மற்றும் வெள்ள நிலைமைகள் குறித்து கந்தளாய் பிரதேச செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.வீதி மூடப்பட்டிருப்பதால், மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.