• Dec 03 2025

நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்த சஜித்!

shanuja / Dec 2nd 2025, 5:31 pm
image

டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 


இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி கிவோர்க் சார்கஸ்ஜான் (Gevorg Sargsyan) மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி திரு. அசேல திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.


பேரனர்த்தம் மற்றும் அதன் பிற்பாடு ஏற்பட்டுள்ள அதன் தற்போதைய தாக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு இங்கு விளக்களித்ததோடு, இதுவரை மனித உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பெருமளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்து, சேதமடைந்துபோயுள்ள விதம் தொடர்பிலும் எடுத்துக்காட்டினார்.


இதன் பிரகாரம், இந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், அழிந்துபோய்யுள்ள, சேதமடைந்துபோயுள்ள சொத்துக்கள் மற்றும் தொழில்முயற்சிகளை மீண்டும் கட்டியெழுப்பி, மக்களை மீண்டும் தூக்கு விட்டு பக்கபலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான உதவி ஒத்துழைப்புகளை இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்த சஜித் டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி கிவோர்க் சார்கஸ்ஜான் (Gevorg Sargsyan) மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி திரு. அசேல திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.பேரனர்த்தம் மற்றும் அதன் பிற்பாடு ஏற்பட்டுள்ள அதன் தற்போதைய தாக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு இங்கு விளக்களித்ததோடு, இதுவரை மனித உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பெருமளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்து, சேதமடைந்துபோயுள்ள விதம் தொடர்பிலும் எடுத்துக்காட்டினார்.இதன் பிரகாரம், இந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், அழிந்துபோய்யுள்ள, சேதமடைந்துபோயுள்ள சொத்துக்கள் மற்றும் தொழில்முயற்சிகளை மீண்டும் கட்டியெழுப்பி, மக்களை மீண்டும் தூக்கு விட்டு பக்கபலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான உதவி ஒத்துழைப்புகளை இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement