• Dec 03 2025

திருமலையில் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் பல கிராமங்கள் - பெரும் அவலம்

Chithra / Dec 2nd 2025, 1:31 pm
image

 

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

எனினும் இன்று வெள்ளம் சற்று குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும் வீடுகளில் வெள்ளநீர் காணப்படுகிறது.

பாலத்தோப்பூர் -தோப்பூர் பிரதான வீதியில் வெள்ளநீர் ஊடறுத்துச் சென்றமையால் நேற்று (01) முழுமையாக போக்குவரத்து தடைபட்டிருந்தது. எனினும் இன்று வெள்ளம் சற்று குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் ஓரளவு பயணிக்க கூடியதாக உள்ளதையும் காணமுடிந்து.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூதூர், கங்குவேலி, பள்ளிக்குடியிருப்பு, பாலத்தோப்பூர், கிளிவெட்டி, பச்சநூர், கூர்க்கண்டம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில்  வெள்ளத்தினால் 3311 குடும்பங்களைச் சேர்ந்த 9726 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 29 இடைதங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் மூசூர் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது.


திருமலையில் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் பல கிராமங்கள் - பெரும் அவலம்  மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.எனினும் இன்று வெள்ளம் சற்று குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும் வீடுகளில் வெள்ளநீர் காணப்படுகிறது.பாலத்தோப்பூர் -தோப்பூர் பிரதான வீதியில் வெள்ளநீர் ஊடறுத்துச் சென்றமையால் நேற்று (01) முழுமையாக போக்குவரத்து தடைபட்டிருந்தது. எனினும் இன்று வெள்ளம் சற்று குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் ஓரளவு பயணிக்க கூடியதாக உள்ளதையும் காணமுடிந்து.மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மூதூர், கங்குவேலி, பள்ளிக்குடியிருப்பு, பாலத்தோப்பூர், கிளிவெட்டி, பச்சநூர், கூர்க்கண்டம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மூதூர் பிரதேச செயலகப் பிரிவில்  வெள்ளத்தினால் 3311 குடும்பங்களைச் சேர்ந்த 9726 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 29 இடைதங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் மூசூர் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement