• May 20 2024

மொழி என்பது நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் நிலைத் தன்மையையும் உருவாக்கும் விடயமாக காணப்படுகிறது...! வடக்கு ஆளுநர் கருத்து...!samugammedia

Sharmi / Sep 29th 2023, 1:50 pm
image

Advertisement

மொழி என்பது மிக முக்கியமானது. மொழி என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்தையும், இந்த நாட்டின் வளர்ச்சியையும் இந்த நாட்டின் நிலைத் தன்மையையும் உருவாக்குகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம், சூரிய நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழிக் கற்கையை நிறைவு செய்த மாணவர்களுக்கு  யாழ்ப்பாணம் - சுதுமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் வைத்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, குறித்த சிங்கள கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றும்போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையை பொறுத்தவரை மூன்று இன மக்கள் வாழுகின்றோம். இரண்டு மொழிகள் மட்டும்தான் இருக்கின்றன. இருந்தாலும் அதனூடாக நாங்கள் பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்திருக்கின்றோம்.

அதாவது தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்பிக்கின்ற செயற்பாடானது முக்கியமான, ஒரு இன்றியமையாத செயற்பாடாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மொழி என்பது நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் நிலைத் தன்மையையும் உருவாக்கும் விடயமாக காணப்படுகிறது. வடக்கு ஆளுநர் கருத்து.samugammedia மொழி என்பது மிக முக்கியமானது. மொழி என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்தையும், இந்த நாட்டின் வளர்ச்சியையும் இந்த நாட்டின் நிலைத் தன்மையையும் உருவாக்குகின்ற ஒரு விடயமாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.இன்றையதினம், சூரிய நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாம் மொழிக் கற்கையை நிறைவு செய்த மாணவர்களுக்கு  யாழ்ப்பாணம் - சுதுமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் வைத்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, குறித்த சிங்கள கற்கை நெறியின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையை பொறுத்தவரை மூன்று இன மக்கள் வாழுகின்றோம். இரண்டு மொழிகள் மட்டும்தான் இருக்கின்றன. இருந்தாலும் அதனூடாக நாங்கள் பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்திருக்கின்றோம்.அதாவது தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியையும் கற்பிக்கின்ற செயற்பாடானது முக்கியமான, ஒரு இன்றியமையாத செயற்பாடாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement