• May 08 2024

மீண்டும் நாடு திரும்பும் தனுஷ்க குணதிலக்க..! samugammedia

Chithra / Sep 29th 2023, 1:39 pm
image

Advertisement

 

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தனுஷ்க குணதிலக்கவிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்  தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக 4 நாட்களாக சிட்னியில் இடம்பெற்றன.

இந்த நிலையில் சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிபதி சாரா ஹகெட் தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க மீண்டும் 360 தினங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.

இதற்கமைய தனுஷ்க குணதிலக்க எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி நாட்டிற்கு வருகை தருவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நாடு திரும்பும் தனுஷ்க குணதிலக்க. samugammedia  பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், தனுஷ்க குணதிலக்கவிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இருந்து தனுஷ்க குணதிலக்க விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்  தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக 4 நாட்களாக சிட்னியில் இடம்பெற்றன.இந்த நிலையில் சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என நீதிபதி சாரா ஹகெட் தீர்ப்பு வழங்கினார்.இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க மீண்டும் 360 தினங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார்.இதற்கமைய தனுஷ்க குணதிலக்க எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் திகதி நாட்டிற்கு வருகை தருவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement