இலங்கையின் உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (10) நிறைவடைகின்றது.
அதாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நடவடிக்கை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
அத்துடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் எனப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு இலங்கையின் உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (10) நிறைவடைகின்றது.அதாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிலையில் குறித்த நடவடிக்கை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.இதற்கமைய, உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ளது.அத்துடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் எனப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.