• Nov 25 2024

இலங்கை விமானசேவை நிறுவனத்திலிருந்து கடந்த வருடம் ஏராளமானோர் பணிவிலகல்...! சபையில் பதிலளித்த அமைச்சர் நிமால்...!

Sharmi / May 8th 2024, 12:24 pm
image

இலங்கை விமானசேவை நிறுவனத்திலிருந்து கடந்த வருடம் பணியிலிருந்து ஏராளமானோர் பதவி விலகியமையாலேயே புதிய ஆட்சேர்ப்பு இடம்பெற்றதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர்,

இலங்கை விமான சேவை நிறுவனத்தில் கடந்த வருடம் 444 இற்கும் அதிகமானோர் பணியில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பதவி விலகிச் சென்ற பின்னர் நாம் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வது தவறா எனவும் கேள்வியெழுப்பினார்.

கடந்த வருடம் 791 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். கடந்த வருடம்  444 இற்கும் அதிகமானோர் பணியை விட்டு சென்றமையாலே புதிய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது என்பதை தெளிவுபடுத்துகின்றேன். 

இது இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் இதேநிலைதான். அங்கு இந்தியன் எயார்லைன்களுக்கும் இதே நிலைதான் காணப்படுகிறது.

எங்களுக்கு விமானங்களை வாங்குவதற்கு பணம் இல்லை.  நாங்கள் குத்தகைக்கு தான் விமானங்களை வாங்குகின்றோம். இலங்கைக்கு சொந்தமான விமானங்கள் எதுவும் இல்லை. அனைத்தும் குத்தகைக்கு எடுக்கப்பட்டதே. 

இவ்வாறு குத்தகைக்கு எடுக்கப்படும் விமானங்களுக்கான குத்தகை தொகையை செலுத்தியதன் பின்னர் எந்த தொகையும் எஞ்சுவதில்லை. ஆகவே விமான சேவை நிறுவனத்திற்கு மறுசீரமைப்புக்கள் தேவைப்படுகின்றன.

எனவே மூலதனம் கொண்டுவரக்கூடிய ஒரு குழுவுடன் இணைந்து நாம் செயற்பட வேண்டும்.அப்போதுதான் விமான சேவையை திறம்பட நடாத்த முடியும்.

இதன் மூலமே விமான சேவையில் இருக்கக்கூடிய 6000 க்கும் மேற்பட்டோரது தொழில் பாதுகாக்கப்படும். எனவே, நீங்கள் நினைப்பது போல் உலகில் உள்ள விமான சேவைகள் இலாபம் உழைப்பதில்லை.

விசேடமாக கொரோனா தொற்று காலப்பகுதிக்கு முன்னரும் அதற்கு பின்னரும் விமான சேவைகளுக்கென்று தனித்துவமான நிலை இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.






















இலங்கை விமானசேவை நிறுவனத்திலிருந்து கடந்த வருடம் ஏராளமானோர் பணிவிலகல். சபையில் பதிலளித்த அமைச்சர் நிமால். இலங்கை விமானசேவை நிறுவனத்திலிருந்து கடந்த வருடம் பணியிலிருந்து ஏராளமானோர் பதவி விலகியமையாலேயே புதிய ஆட்சேர்ப்பு இடம்பெற்றதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர்,இலங்கை விமான சேவை நிறுவனத்தில் கடந்த வருடம் 444 இற்கும் அதிகமானோர் பணியில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.இந்நிலையில் பதவி விலகிச் சென்ற பின்னர் நாம் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வது தவறா எனவும் கேள்வியெழுப்பினார்.கடந்த வருடம் 791 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். கடந்த வருடம்  444 இற்கும் அதிகமானோர் பணியை விட்டு சென்றமையாலே புதிய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது என்பதை தெளிவுபடுத்துகின்றேன். இது இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் இதேநிலைதான். அங்கு இந்தியன் எயார்லைன்களுக்கும் இதே நிலைதான் காணப்படுகிறது.எங்களுக்கு விமானங்களை வாங்குவதற்கு பணம் இல்லை.  நாங்கள் குத்தகைக்கு தான் விமானங்களை வாங்குகின்றோம். இலங்கைக்கு சொந்தமான விமானங்கள் எதுவும் இல்லை. அனைத்தும் குத்தகைக்கு எடுக்கப்பட்டதே. இவ்வாறு குத்தகைக்கு எடுக்கப்படும் விமானங்களுக்கான குத்தகை தொகையை செலுத்தியதன் பின்னர் எந்த தொகையும் எஞ்சுவதில்லை. ஆகவே விமான சேவை நிறுவனத்திற்கு மறுசீரமைப்புக்கள் தேவைப்படுகின்றன.எனவே மூலதனம் கொண்டுவரக்கூடிய ஒரு குழுவுடன் இணைந்து நாம் செயற்பட வேண்டும்.அப்போதுதான் விமான சேவையை திறம்பட நடாத்த முடியும்.இதன் மூலமே விமான சேவையில் இருக்கக்கூடிய 6000 க்கும் மேற்பட்டோரது தொழில் பாதுகாக்கப்படும். எனவே, நீங்கள் நினைப்பது போல் உலகில் உள்ள விமான சேவைகள் இலாபம் உழைப்பதில்லை.விசேடமாக கொரோனா தொற்று காலப்பகுதிக்கு முன்னரும் அதற்கு பின்னரும் விமான சேவைகளுக்கென்று தனித்துவமான நிலை இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement