• Nov 08 2024

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- லக்ஷ்மன் கிரியெல்ல தீர்மானம்..!

Sharmi / Oct 8th 2024, 10:38 pm
image

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது 36 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரியெல்ல, 

பல தசாப்தகால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவரது மகள் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுதிப்படுத்துமாறு கேட்ட போது, ​​இந்த விடயம் நாளை வெளிப்படுத்தப்படும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- லக்ஷ்மன் கிரியெல்ல தீர்மானம். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது 36 ஆண்டுகால பாராளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரியெல்ல, பல தசாப்தகால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.அவரது மகள் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுதிப்படுத்துமாறு கேட்ட போது, ​​இந்த விடயம் நாளை வெளிப்படுத்தப்படும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement