தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று (22) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதுவரை வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மற்றுமொரு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதையடுத்து தான் தென் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்து பதவியை வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதியினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று (22) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.இதுவரை வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மற்றுமொரு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதையடுத்து தான் தென் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை வைத்து பதவியை வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கடந்த மே மாதம் ஜனாதிபதியினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.