• Nov 10 2024

முறையான அரசாட்சியை முன்னெடுத்தே தீருவோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உறுதி

Chithra / Sep 8th 2024, 11:16 am
image


அரசமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாத்து, நல்லாட்சியை முன்னெடுக்கின்ற வகையில் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுப்போம். தசராஜ தர்மத்தை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பு கோட்டே ராஜ மகா விகாரைக்கு இன்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  இவ்வாறு தெரிவித்தார்.

ஒற்றுமையே நாட்டின் மிகப் பெரிய பலமாகும். எனவே இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதங்களின்றி ஒற்றுமையோடு முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அத்தோடு நாட்டின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் முறையாகவும் நியாயமாகவும் இடம்பெறும். சரியான வழிமுறையை கையாளும் போது எவருக்கும் திருட முடியாது.

அவசர நிலைமைகளின்போதும் இடம்பெறுகின்ற கொள்முதல் முறைகளில் இருந்து விலகிப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமையால், கடந்த காலங்களில் பெருந்தொகையான நிதி மோசடி இடம்பெற்றிருக்கின்றன. 

வி.எப்.எஸ்.போன்ற கொடுக்கல் - வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளது. இது குறித்து நீதிமன்றத் தீர்ப்பொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே, அரச நிர்வாகத்துக்குள் முறையான கட்டமைப்பு ஒன்று காணப்பட வேண்டும். - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


முறையான அரசாட்சியை முன்னெடுத்தே தீருவோம் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உறுதி அரசமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாத்து, நல்லாட்சியை முன்னெடுக்கின்ற வகையில் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுப்போம். தசராஜ தர்மத்தை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.கொழும்பு கோட்டே ராஜ மகா விகாரைக்கு இன்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  இவ்வாறு தெரிவித்தார்.ஒற்றுமையே நாட்டின் மிகப் பெரிய பலமாகும். எனவே இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதங்களின்றி ஒற்றுமையோடு முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.அத்தோடு நாட்டின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் முறையாகவும் நியாயமாகவும் இடம்பெறும். சரியான வழிமுறையை கையாளும் போது எவருக்கும் திருட முடியாது.அவசர நிலைமைகளின்போதும் இடம்பெறுகின்ற கொள்முதல் முறைகளில் இருந்து விலகிப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமையால், கடந்த காலங்களில் பெருந்தொகையான நிதி மோசடி இடம்பெற்றிருக்கின்றன. வி.எப்.எஸ்.போன்ற கொடுக்கல் - வாங்கல்களில் மோசடி இடம்பெற்றுள்ளது. இது குறித்து நீதிமன்றத் தீர்ப்பொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.எனவே, அரச நிர்வாகத்துக்குள் முறையான கட்டமைப்பு ஒன்று காணப்பட வேண்டும். - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement