சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரையும் பதவியையும் பயன்படுத்தி ஒரு சிலர் கட்சி உறுப்பினர்களை ஏமாற்றி வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முழு சட்ட அதிகாரமும் எமது குழுவிற்கு உண்டு.
ஆனால் கட்சியின் சட்ட உரிமையற்ற தயாசிறி ஜயசேகர மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் காட்டிக்கொண்டு எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பிரசாரம் செய்கின்றனர்.
அவர்கள் இருவரும் கட்சி விவகாரங்களில் இடையூறு செய்யவோ, தலையிடவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருந்த போதிலும், பதவிகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரையும் இவ்வாறு பயன்படுத்தி எமது உறுப்பினர்களை தவறாக வழிநடத்துவதற்கு அவர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது.
எனவே இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தயாசிறி மற்றும் விஜயதாசவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எச்சரித்துள்ள மகிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரையும் பதவியையும் பயன்படுத்தி ஒரு சிலர் கட்சி உறுப்பினர்களை ஏமாற்றி வருவதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.அகுனுகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முழு சட்ட அதிகாரமும் எமது குழுவிற்கு உண்டு. ஆனால் கட்சியின் சட்ட உரிமையற்ற தயாசிறி ஜயசேகர மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் இக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் காட்டிக்கொண்டு எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பிரசாரம் செய்கின்றனர்.அவர்கள் இருவரும் கட்சி விவகாரங்களில் இடையூறு செய்யவோ, தலையிடவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இருந்த போதிலும், பதவிகளையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரையும் இவ்வாறு பயன்படுத்தி எமது உறுப்பினர்களை தவறாக வழிநடத்துவதற்கு அவர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது. எனவே இது தொடர்பாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.