முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் யுத்தத்தை நிறைவுசெய்வதற்கு உதவியதாகவும் அதனால் அவர் தேசிய வீரராகப் போற்றப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில கூறியமையானது மிகவும் கவலையளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தைச் சேர்ந்த பலரையும், மதகுருமார் பலரையும் கொலை செய்வதற்குக் காரணமாக இருந்த முக்கியமான நபர் பிள்ளையான் ஆவார்.
அவர் தேசிய வீரர் என்றால் நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் தேசத்துரோகிகளா? எனவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.
உதய கம்மன்பிலவின் இந்தக் கருத்தானது நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானதொரு செயலாகும்.
எனவே, தேசிய வீரர்களுக்கு அவமரியாதை செய்யும் வகையிலான அவரது இந்தச் செயலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அருட்தந்தை கோரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கோரியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். பிள்ளையான் யுத்தத்தை நிறைவுசெய்வதற்கு உதவியதாகவும் அதனால் அவர் தேசிய வீரராகப் போற்றப்பட வேண்டும் எனவும் உதய கம்மன்பில கூறியமையானது மிகவும் கவலையளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த பலரையும், மதகுருமார் பலரையும் கொலை செய்வதற்குக் காரணமாக இருந்த முக்கியமான நபர் பிள்ளையான் ஆவார். அவர் தேசிய வீரர் என்றால் நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள் தேசத்துரோகிகளா எனவும் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். உதய கம்மன்பிலவின் இந்தக் கருத்தானது நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு ஒப்பானதொரு செயலாகும். எனவே, தேசிய வீரர்களுக்கு அவமரியாதை செய்யும் வகையிலான அவரது இந்தச் செயலுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.