அரசியல் ரீதியாக பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜயிக்கா(JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம்,
அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இதன்பின்னர் கருத்தத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் பிளவுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேசிய அபிவிருத்திக்கான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ஆதாயங்களுக்காக அல்ல, தேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒன்றிணைவோம். ஜனாதிபதி மீண்டும் அழைப்பு அரசியல் ரீதியாக பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் ஜயிக்கா(JICA) நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதலாம் கட்டம்,அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , JICA தலைவர் டனகா அகிஹிக்கோ ஆகியோரினால் இன்று திறந்துவைக்கப்பட்டது.இதன்பின்னர் கருத்தத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.அரசியல் பிளவுகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தேசிய அபிவிருத்திக்கான ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.அரசியல் ஆதாயங்களுக்காக அல்ல, தேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.