• Jan 23 2025

தொழிற்துறையை உருவாக்கி கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவோம் - இளங்குமரன் எம்.பி

Tharmini / Jan 13th 2025, 10:24 am
image

பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 725 மாணவர்களுக்கு, ஈழ நிசான் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம்.

நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.

தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும். தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.

எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் - ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம். 

கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்றார்.








தொழிற்துறையை உருவாக்கி கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவோம் - இளங்குமரன் எம்.பி பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காரணம் நாட்டின் பொருளாதார பின்னடைவும் கிராமிய வறுமையுமே என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 725 மாணவர்களுக்கு, ஈழ நிசான் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் 7 இலட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான  கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த அரசாங்கத்தை விட எமது அரசாங்கத்தில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கல்விக்கு மேலும் அதிக நிதியை ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்துவோம்.நாட்டை விட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. நாங்கள் எமது நாட்டினுள்ளேயே தொழிற் துறைகளை உருவாக்கும் போது மாணவர்களும் இங்கே கல்வி கற்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.தங்கத் தீவாக இருந்த தீவகம், கடந்த ஆட்சியாளர்களின் திறனற்ற ஆட்சி காரணமாக தகரத் தீவாக மாற்றம் பெற்றுள்ளது. சுற்றுலாத்துறையை தீவகத்தில் அபிவிருத்தி செய்வதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இடமாக மாற்றுவதனூடாக தீவகம் மீண்டும் செந்தளிப்பு பெறும். தீவகத்தை மீண்டும் தங்கத் தீவாக மிளிர வைப்போம்.எதிர்காலத்தில் வடக்கில் மூன்று மத்திய பொருளாதார நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை மாங்குளத்திலும், பரந்தன் - ஆனையிறவை மையப்படுத்திய இடத்தில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும், பலாலியில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இங்கேயே தொழில்துறையை உருவாக்கி, இங்கேயே உழைத்து உண்ணக்கூடிய ஒரு நிலையை உருவாக்குவோம். கடந்த காலத்தில் மனித வளம் சிறந்த முகாமைத்துவம் இல்லாமையால் வீணடிக்கப்பட்டது. ஆனால் இனி நாங்கள் மனித வளத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு நிர்வகித்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now