• May 04 2024

'கறுப்பு யூலை இருள் களைய இசையால் சுடரேற்றுவோம்' யாழில் நாளை இசை நிகழ்வு..!samugammedia

Sharmi / Jul 29th 2023, 4:36 pm
image

Advertisement

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் மாற்றத்திற்கான இளைஞர்கள்(youth for change) அமைப்பினரும் யாழ்ப்பாணத்தின் கலைஞர்கள், கலைக் குழுக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து நாளை (30) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் 'கறுப்பு யூலை இருள் களைய இசையால் சுடரேற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் முன்னெடுக்கவுள்ளது என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் தனுஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கறுப்பு யூலை இருள் களைய இசையால் சுடரேற்றுவோம் எனும் தொனிப் பொருளிலே இசை நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

1983 ம் ஆண்டு இந்த நாட்டின் அபிவிருத்தி , வளர்ச்சி ,  சமாதானம்  அனைத்தையும் சீர்குலைத்து இந்த நாட்டில் கொழுத்திவிடப்பட்ட இனவாத தீயின் துன்பங்களை அனுபவித்தவர்களாக உள்ளோம்.

அரசியல்வாதிகளுடைய தேவைக்காக நீண்டவொரு யுத்தத்தையும அது சார்ந்த அழிவுகளையும் மாற்றுவதற்காக தமிழ் மக்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக மதித்து ஐக்கியப்பட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.

ஒன்று இலவச மருதுவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு மரணங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.  இதற்கெதிராக ஐக்கியப்படுதலே அவசியம் என்பதை கடந்த காலம்  உணர்த்தி நிற்கின்றது.

எனவே அனைத்து மக்களின் சமத்துவத்தை உணர்த்தும் முகமாக விடுதலைத் தாளங்கள் எனும்  இசை நிகழ்வு தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.  இது களியாட்ட நிகழ்வல்ல கலையின் மீது இணைந்து மக்கள் எழுச்சி பூணுவதற்கான போராட்டம் ஆகும் எனத் தெரிவித்தார்.

'கறுப்பு யூலை இருள் களைய இசையால் சுடரேற்றுவோம்' யாழில் நாளை இசை நிகழ்வு.samugammedia சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் மாற்றத்திற்கான இளைஞர்கள்(youth for change) அமைப்பினரும் யாழ்ப்பாணத்தின் கலைஞர்கள், கலைக் குழுக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து நாளை (30) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் 'கறுப்பு யூலை இருள் களைய இசையால் சுடரேற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் முன்னெடுக்கவுள்ளது என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் தனுஜன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கறுப்பு யூலை இருள் களைய இசையால் சுடரேற்றுவோம் எனும் தொனிப் பொருளிலே இசை நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளோம்.1983 ம் ஆண்டு இந்த நாட்டின் அபிவிருத்தி , வளர்ச்சி ,  சமாதானம்  அனைத்தையும் சீர்குலைத்து இந்த நாட்டில் கொழுத்திவிடப்பட்ட இனவாத தீயின் துன்பங்களை அனுபவித்தவர்களாக உள்ளோம்.அரசியல்வாதிகளுடைய தேவைக்காக நீண்டவொரு யுத்தத்தையும அது சார்ந்த அழிவுகளையும் மாற்றுவதற்காக தமிழ் மக்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக மதித்து ஐக்கியப்பட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது.ஒன்று இலவச மருதுவம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு மரணங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.  இதற்கெதிராக ஐக்கியப்படுதலே அவசியம் என்பதை கடந்த காலம்  உணர்த்தி நிற்கின்றது.எனவே அனைத்து மக்களின் சமத்துவத்தை உணர்த்தும் முகமாக விடுதலைத் தாளங்கள் எனும்  இசை நிகழ்வு தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.  இது களியாட்ட நிகழ்வல்ல கலையின் மீது இணைந்து மக்கள் எழுச்சி பூணுவதற்கான போராட்டம் ஆகும் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement