• May 08 2026

கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல்

dorin / Jan 10th 2026, 9:22 pm
image

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பாக மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். 

நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், 

“கிரீன்லாந்தை எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ எப்படியாவது கைப்பற்றப் போகிறேன்” என்று கூறி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

 “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்தில் ஏதாவது செய்வோம்” என்று டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்தார். 

இது, சர்வதேச சட்டங்கள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறும் கருத்தாக விமர்சிக்கப்படுகிறது.

முன்னதாகவும், 2019 ஆம் ஆண்டு டிரம்ப் தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என கூறி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அப்போது டென்மார்க் அரசு அந்த யோசனையை முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்து, டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி ஆகும். 

இயற்கை வளங்கள், இராணுவ முக்கியத்துவம் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள அதன் புவியியல் அமைப்பு காரணமாக, அது உலக சக்திகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

டிரம்பின் இந்த கருத்துக்கு, டென்மார்க் அல்லது கிரீன்லாந்து அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.

இருப்பினும், அரசியல் வட்டாரங்களில் இது புதிய தூதரக பதற்றங்களை உருவாக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கிரீன்லாந்தை கைப்பற்றுவோம் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பாக மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், “கிரீன்லாந்தை எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ எப்படியாவது கைப்பற்றப் போகிறேன்” என்று கூறி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்தில் ஏதாவது செய்வோம்” என்று டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்தார். இது, சர்வதேச சட்டங்கள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறும் கருத்தாக விமர்சிக்கப்படுகிறது.முன்னதாகவும், 2019 ஆம் ஆண்டு டிரம்ப் தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என கூறி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.அப்போது டென்மார்க் அரசு அந்த யோசனையை முற்றிலும் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.கிரீன்லாந்து, டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பகுதி ஆகும். இயற்கை வளங்கள், இராணுவ முக்கியத்துவம் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள அதன் புவியியல் அமைப்பு காரணமாக, அது உலக சக்திகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.டிரம்பின் இந்த கருத்துக்கு, டென்மார்க் அல்லது கிரீன்லாந்து அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.இருப்பினும், அரசியல் வட்டாரங்களில் இது புதிய தூதரக பதற்றங்களை உருவாக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement