• Sep 06 2025

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

Chithra / Sep 5th 2025, 3:10 pm
image

மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி  திரு மிஹால் தலைமையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்திற்கு கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

எதிரி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வாவுடன் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆஜராகி இருந்தனர்.

வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி இருந்தார்.

வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மன்னார் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி  திரு மிஹால் தலைமையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்திற்கு கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுஎதிரி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வாவுடன் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆஜராகி இருந்தனர்.வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் ஆஜராகி இருந்தார்.வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement