• Nov 28 2024

கொழும்பில் மீண்டும் இலகு ரயில் போக்குவரத்து திட்டம்!

Chithra / May 5th 2024, 9:09 am
image


கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்த பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள யென் கடன் திட்டங்களை விரைவாக மீண்டும் தொடங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் ஆதரவளிக்கும் ஜப்பானின் விருப்பத்தை யோகோ கமிகாவா  தெரிவித்தார்.

ஜூலை 2023 இல், இலங்கையின் அமைச்சரவையானது, முன்மொழியப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் பற்றிய விவாதங்களை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான காலவரையறையை முடிவு செய்ய பச்சைக்கொடி காட்டியது.

கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டதுடன், தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிக்கை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மீண்டும் இலகு ரயில் போக்குவரத்து திட்டம் கொழும்பில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலகு தொடருந்து போக்குவரத்து திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.ஜப்பானிய வெளியுறவு அமைச்சரை நேற்று கொழும்பில் சந்தித்த பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள யென் கடன் திட்டங்களை விரைவாக மீண்டும் தொடங்குவதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு மேலும் ஆதரவளிக்கும் ஜப்பானின் விருப்பத்தை யோகோ கமிகாவா  தெரிவித்தார்.ஜூலை 2023 இல், இலங்கையின் அமைச்சரவையானது, முன்மொழியப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் பற்றிய விவாதங்களை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான காலவரையறையை முடிவு செய்ய பச்சைக்கொடி காட்டியது.கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு நிதி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டதுடன், தேசிய செயற்பாட்டு மையத்தினால் அறிக்கை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement