மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சிவிக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் ஏற்பட்ட மின்னல்தாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் சேகரிப்பு வாகனம் மீது மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவம் ஒன்று நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
நேற்று மலை ஏற்பட்ட மின்னல்தாக்கத்தில் பால் சேகரிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தததினால் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த முன் கண்ணாடி முற்றாக உடைந்த போயுள்ளது.இதன் காரணமாக நேற்று மாலையும் இன்றைய தினமும் பால் சேகரிப்பு செய்வதற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாக அதன் சாரதி தெரிவித்துள்ளார்.
குறித்த மின்னல் தாக்குதல் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் அப்கட் டயரி என்ற பால் சேகரிப்பு நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்த வாகனம் ஒன்றே இவ்வாறு சேதமடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகனம் பால் சேகரிப்பதற்காக வராத நிலையில் இன்றைய தினம் தாம் பசுக்களில் எடுத்த பால் வீண் விரயமானதாக குறித்த பகுதியில் உள்ள கால் நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் உபகரணங்கள் பல சேதமடைந்து உள்ளதுடன் பதினைந்து தொலைக்காட்சி பெட்டிகள் பழுதுதானதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை பெய்த இடி மின்னலுடனான காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியாவில் மின்னல் தாக்கம் பலத்த சேதங்கள் ஏற்பட்டதாக பொது மக்கள் கவலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சிவிக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் ஏற்பட்ட மின்னல்தாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் சேகரிப்பு வாகனம் மீது மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவம் ஒன்று நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .நேற்று மலை ஏற்பட்ட மின்னல்தாக்கத்தில் பால் சேகரிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தததினால் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த முன் கண்ணாடி முற்றாக உடைந்த போயுள்ளது.இதன் காரணமாக நேற்று மாலையும் இன்றைய தினமும் பால் சேகரிப்பு செய்வதற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதாக அதன் சாரதி தெரிவித்துள்ளார்.குறித்த மின்னல் தாக்குதல் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் அப்கட் டயரி என்ற பால் சேகரிப்பு நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வந்த வாகனம் ஒன்றே இவ்வாறு சேதமடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.வாகனம் பால் சேகரிப்பதற்காக வராத நிலையில் இன்றைய தினம் தாம் பசுக்களில் எடுத்த பால் வீண் விரயமானதாக குறித்த பகுதியில் உள்ள கால் நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதேவேளை குறித்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் உபகரணங்கள் பல சேதமடைந்து உள்ளதுடன் பதினைந்து தொலைக்காட்சி பெட்டிகள் பழுதுதானதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை பெய்த இடி மின்னலுடனான காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.