• Nov 28 2024

தலைவர் பிரபாகரனை போல் தமிழ் தேசியத்தை உலகறிய செய்வேன்..! சிறீதரன் சுட்டிக்காட்டு

Chithra / Jan 7th 2024, 8:32 am
image

 

தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் காலத்தில் நாங்கள் விடுதலைபெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் எவ்வாறு தன்னுடைய ஆங்கில மொழியோ சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார். 

ஆனால் எத்தனையோ தலைவர்கள் தேடி வந்து பேசிய வரலாறை நாங்கள் திரும்பிப் பார்க்கின்றோம். ஆகவே அவற்றை நாங்கள் விமர்சிக்க தேவையில்லை.

அது மொழி என்பது ஒரு கொடை சட்டம் என்பது கிடைக்கின்ற கல்வி ரீதியான ஆற்றல் அவை இருக்கட்டும்.

ஆனால் தலைமைத்துவத்திற்கு அவர்களுடைய தைரியமும் மக்களை வழி நடத்துகின்ற பற்றும் இனம் மீதான சிந்தனையும் இருந்தால் அது ஒரு நல்ல தலைமைத்துவமாக வளரும்.

யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஐயாவும் தலைவராக வரக்கூடிய பூரண தகுதி கொண்டவர். என்னுடைய சக வேட்பாளர் சுமந்திரனும் தலைவராக வருவதற்குரிய பூரண தகுதியை கொண்டவர்.

ஆனால் இதை விட விண்ணப்பிக்காதவர்கள் வெளியிலே கட்சியை நடத்தக்கூடிய தலைவர்களும் இருக்கின்றார்கள்.என்றார்.


தலைவர் பிரபாகரனை போல் தமிழ் தேசியத்தை உலகறிய செய்வேன். சிறீதரன் சுட்டிக்காட்டு  தலைவர் பிரபாகரன் ஆங்கில மொழியோ, சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.மேலும், தலைவர்களுக்கு ஆங்கில மொழி புலமையும் சட்ட அறிவும் அவசியமென்றால் தந்தை செல்வா, ஜிஜி பொன்னம்பலம் காலத்தில் நாங்கள் விடுதலைபெற்றிருக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.தலைவர் பிரபாகரன் எவ்வாறு தன்னுடைய ஆங்கில மொழியோ சட்ட புலமையோ இல்லாமல் உலகத்திற்கு தமிழ் தேசியத்தை கொண்டு சென்று தமிழினத்தை அடையாளப்படுத்தினார். ஆனால் எத்தனையோ தலைவர்கள் தேடி வந்து பேசிய வரலாறை நாங்கள் திரும்பிப் பார்க்கின்றோம். ஆகவே அவற்றை நாங்கள் விமர்சிக்க தேவையில்லை.அது மொழி என்பது ஒரு கொடை சட்டம் என்பது கிடைக்கின்ற கல்வி ரீதியான ஆற்றல் அவை இருக்கட்டும்.ஆனால் தலைமைத்துவத்திற்கு அவர்களுடைய தைரியமும் மக்களை வழி நடத்துகின்ற பற்றும் இனம் மீதான சிந்தனையும் இருந்தால் அது ஒரு நல்ல தலைமைத்துவமாக வளரும்.யாரையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஐயாவும் தலைவராக வரக்கூடிய பூரண தகுதி கொண்டவர். என்னுடைய சக வேட்பாளர் சுமந்திரனும் தலைவராக வருவதற்குரிய பூரண தகுதியை கொண்டவர்.ஆனால் இதை விட விண்ணப்பிக்காதவர்கள் வெளியிலே கட்சியை நடத்தக்கூடிய தலைவர்களும் இருக்கின்றார்கள்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement