• Nov 28 2024

கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Chithra / Sep 28th 2024, 12:05 pm
image


கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தற்காலிகமாக குறிப்பிட்ட காலம் வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரத்துக்கு நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவிவருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பூநகரி, பொன்னகர், பாரதிபுரம், விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நீரை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் காணப்படுவதனால் பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் - மக்களுக்கு வெளியான அறிவிப்பு கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி திறனை விட மக்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் நீர் விநியோகத்தை 24 மணிநேரமும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தற்காலிகமாக குறிப்பிட்ட காலம் வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரத்துக்கு நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.தொடர்ச்சியாக வெப்பமான காலநிலை நிலவிவருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் பூநகரி, பொன்னகர், பாரதிபுரம், விவேகானந்த நகர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நீரை விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இக்காலப் பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் காணப்படுவதனால் பொதுமக்கள் நீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement