• Apr 27 2024

இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா நோய்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 18th 2023, 8:36 am
image

Advertisement

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண் ஒருவர் லிஸ்டீரியா' என்ற நோய் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இம்மாதத்தின் முதல் வாரத்தில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களுக்கு வாந்தி , தலைவலி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்றைய சிவனொளிபாதமலையை அண்மித்த நல்லதண்ணி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளில் உணவுகளின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பெண் உட்கொண்ட உணவுகள் , உணவு பெற்றுக்கொண்ட கடைகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 'லிஸ்டீரியா' என்ற நோய் பரவக்கூடிய அபாயம் இல்லை எனவும், மக்கள் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள லிஸ்டீரியா நோய் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு SamugamMedia சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண் ஒருவர் லிஸ்டீரியா' என்ற நோய் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை இலங்கை மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.எனவே இம்மாதத்தின் முதல் வாரத்தில் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்றவர்களுக்கு வாந்தி , தலைவலி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்றைய சிவனொளிபாதமலையை அண்மித்த நல்லதண்ணி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிற்றுண்டிசாலைகளில் உணவுகளின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.மேலும் குறித்த பெண் உட்கொண்ட உணவுகள் , உணவு பெற்றுக்கொண்ட கடைகள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 'லிஸ்டீரியா' என்ற நோய் பரவக்கூடிய அபாயம் இல்லை எனவும், மக்கள் வீண் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement