• Mar 06 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தல்; தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடியது..!

Sharmi / Mar 6th 2025, 11:19 am
image

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம் நேற்றைய தினம்(05) மாலை கொழும்பில் நடைபெற்றது.

குறித்த அரசியல் குழு கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியானது நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி , கேகாலை , களுத்துறை , கொழும்பு , கம்பஹா ஆகிய மாவட்டங்களிலே போட்டியிடுவதாக தீர்மானித்துள்ளோம்.

ஏறக்குறைய 35க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களிலே தமிழ் முற்போக்கு கூட்டணியானது போட்டியிடவுள்ளது. அதற்குரிய நூற்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை நாங்கள் களமிறக்க தீர்மானித்துள்ளோம்.

இந்த வேட்பாளர்களிலே பலர் புது முகங்களாக இளைஞர்களாக  இருக்கின்றார்கள். அவர்களை மாவட்ட கிளை சார்ந்த  அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் அவர்களை வழிநடாத்த தீர்மானித்திருக்கின்றார்கள் எனவும்  தெரிவித்தார்.















உள்ளூராட்சி மன்ற தேர்தல்; தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூடியது. பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம் நேற்றைய தினம்(05) மாலை கொழும்பில் நடைபெற்றது.குறித்த அரசியல் குழு கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியானது நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி , கேகாலை , களுத்துறை , கொழும்பு , கம்பஹா ஆகிய மாவட்டங்களிலே போட்டியிடுவதாக தீர்மானித்துள்ளோம்.ஏறக்குறைய 35க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களிலே தமிழ் முற்போக்கு கூட்டணியானது போட்டியிடவுள்ளது. அதற்குரிய நூற்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை நாங்கள் களமிறக்க தீர்மானித்துள்ளோம்.இந்த வேட்பாளர்களிலே பலர் புது முகங்களாக இளைஞர்களாக  இருக்கின்றார்கள். அவர்களை மாவட்ட கிளை சார்ந்த  அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் அவர்களை வழிநடாத்த தீர்மானித்திருக்கின்றார்கள் எனவும்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement