• Mar 06 2025

ஒட்டிசுட்டான் தொழிற்சாலையை மீளக்கட்டியெழுப்ப வேலைத்திட்டங்கள்! பாராளுமன்றில் அறிவிப்பு!

Chithra / Mar 6th 2025, 11:17 am
image


ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீளக்கட்டியெழுப்ப மார்ச் மாதமளவில் வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

போர் காரணமாக ஒட்டி சுட்டான் ஒட்டு தொழிற்சாலை பல வருடங்களாக மூடப்பட்டிருக்கின்றது. 

இதனை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன்  பாராளுமன்றில் இன்று  கோரிக்கை விடுத்திருந்தார். 

இதற்குப்பதிலளித்த பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க,

இந்த ஓட்டுத் தொழிற்சாலை உட்பட அரசாங்கக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இருக்கின்ற பல்வேறு தொழிற்சாலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. 

இந்த தொழிற்சாலை யுத்த நிலைமை காரணமாக  1990 ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டிருக்கிறது. எனவே மீண்டும் இதனை ஆரம்பிப்பதற்கு 2015 ஆம் ஆண்டு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நாம் 2024 ஆம் ஆண்டு திறைசேரியினால் 15 மில்லியன்  ரூபா இதன் வேலைகளை ஆரம்பிப்பதற்கு பெற்றுக் கொள்ளப்பட்டு இதன் வேலைகளை ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் அளவில் வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. மூலதனம் எமக்குத் தேவைப்படுகின்றது. அமைச்சு வெற்றிகரமாக இந்த தொழிற்சாலைகளை முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கிறது. எனத் தெரிவித்தார்.

ஒட்டிசுட்டான் தொழிற்சாலையை மீளக்கட்டியெழுப்ப வேலைத்திட்டங்கள் பாராளுமன்றில் அறிவிப்பு ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை மீளக்கட்டியெழுப்ப மார்ச் மாதமளவில் வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.போர் காரணமாக ஒட்டி சுட்டான் ஒட்டு தொழிற்சாலை பல வருடங்களாக மூடப்பட்டிருக்கின்றது. இதனை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன்  பாராளுமன்றில் இன்று  கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப்பதிலளித்த பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க,இந்த ஓட்டுத் தொழிற்சாலை உட்பட அரசாங்கக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இருக்கின்ற பல்வேறு தொழிற்சாலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த தொழிற்சாலை யுத்த நிலைமை காரணமாக  1990 ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டிருக்கிறது. எனவே மீண்டும் இதனை ஆரம்பிப்பதற்கு 2015 ஆம் ஆண்டு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.நாம் 2024 ஆம் ஆண்டு திறைசேரியினால் 15 மில்லியன்  ரூபா இதன் வேலைகளை ஆரம்பிப்பதற்கு பெற்றுக் கொள்ளப்பட்டு இதன் வேலைகளை ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.மார்ச் மாதம் அளவில் வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. மூலதனம் எமக்குத் தேவைப்படுகின்றது. அமைச்சு வெற்றிகரமாக இந்த தொழிற்சாலைகளை முன்னெடுத்துச் செல்ல ஆயத்தமாக இருக்கிறது. எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement