• Sep 20 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sharmi / Jan 13th 2023, 12:50 pm
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுப்படியற்றதாக்குமாறு ரிட் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என  கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றில் அறிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு அறிவித்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த விடயத்தை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுப்படியற்றதாக்குமாறு ரிட் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என  கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தர உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றில் அறிவித்தார்.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர் எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இவ்வாறு அறிவித்தது.

Advertisement

Advertisement

Advertisement