• Nov 26 2024

இந்திய மக்களவைத் தேர்தல்- மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடி

Tamil nila / Jun 4th 2024, 9:11 pm
image

வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ.க சார்பில் களமிறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர  மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை தன்வசப்படுத்தினார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகமாகும்.

வாரணாசி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட்டு, பிரதமர் மோடி 'ஹெட்ரிக்' வெற்றிப்பெற்றதை பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 

கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளார். 





இந்திய மக்களவைத் தேர்தல்- மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 3வது முறையாக பா.ஜ.க சார்பில் களமிறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர  மோடி 1.52 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளை பெற்ற பிரதமர் மோடி 6,11,439 ஓட்டுகளுடன் வெற்றியை தன்வசப்படுத்தினார். இது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் அதிகமாகும்.வாரணாசி தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியிட்டு, பிரதமர் மோடி 'ஹெட்ரிக்' வெற்றிப்பெற்றதை பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் 6 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பிரதமர் மோடி, இம்முறை 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement