• Apr 30 2025

மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது தேனிலவு கொண்டாடிய ஒட்டுண்ணி குதிரை கஜேந்திரன்; கடுமையாக சாடிய ஈ.பி.டி.பி

Chithra / Apr 30th 2025, 3:14 pm
image


தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி, தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

அண்மையில் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று மேற்கொண்ட ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - 

ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில், எம்மீதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீதும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு எமக்கு இருக்கின்றது.

குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வேலணை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக சில உண்மைகளை எமது மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

உண்மையிலேயே, நேர்மையான அரசியல் செய்கின்றவர்ளாக இருந்தால், தீவக மக்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்களாக இருந்திருந்தால், கிராமங்களின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தீவக மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக பேசியிருக்க வேண்டும். தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் பற்றி பிரஸ்தாபித்திருக்க வேண்டும்.

ஆனால், எமது செயலாளர் நாயகம் தொடர்பாக அபாண்டமான சேறடிப்புக்களை முன்வைத்திருக்கின்றார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் கோட்டையாக விளங்கி வருகின்ற தீவகப் பிரதேசத்தில், எமது வாக்கு வங்கிகளை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே குறித்த சேறடிப்பு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அதாவது, குதிரை கஜேந்திரன் என்று சொல்லப்படுகின்ற ஒட்டுண்ணி தீவக மண்ணிலே வந்து நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு சென்றிருக்கின்றது. 

கடந்த காலங்களில் எங்களுடைய மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்த அந்த ஒட்டுண்ணி யார் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ளவார்கள்.

கிராமங்கள் தோறும் சென்று இராணுவத்திற்கு ஆள் சேர்துக் கொடுத்தாக இன்று ஜே.வி.பி. யினர் மீது குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

அதற்கான ஜே.வி.பி. யினருக்கு கொம்பு சீவிவிட்ட பெருமை இந்த ஒட்டுண்ணிக்கு இருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இறுதி யுத்த மேகங்கள் வன்னி நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் 40 ஆயிரம் சவப் பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசியதன் மூலம், தென்னிலங்கையிலே இருக்கின்ற பேரினவாத தரப்புக்களை உசுப்பேற்றி விட்டு நாட்டை விட்டு ஓடித் தப்பியதுதான் போராட்டத்திற்கு இந்த ஒட்டுண்ணி செய்த அதிஉச்ச பட்சமான தியாகம்.

போகும்போதும் சும்மா செல்லவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சொகுச வாகனத்தை சொந்தமாக்கி கொள்வதற்கு 35 இலட்சம் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து, புலிகளின் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் ஊடாக புலிகளிடம் இருந்து அந்தப் பணத்தினைப் பெற்றுக் சொகுசு வாகனத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பல இலட்சம் ரூபாய்களையும் சுருட்டிக கெர்ண்டு ஓடியதுதான் இந்த ஒட்டுண்ணி தமிழர்கள் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பு.

வன்னியிலே எங்களுடைய மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, வனாந்தாரங்களிலே போக்கிடம் தெரியாமல் அலைந்து கொண்டிருந்த போது, சுவிஸ்லாந்தில் இந்த ஒட்டுண்ணி தேனிலவு கொண்டிடாக் கொண்டு இருந்துவிட்டு, இப்போது கதை சொல்கிறது.

தன்னுடைய தேசியத் தலைமை தேசியக் கடமையை நிறைவேற்றுவதற்காக தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாம். நாம் கேட்கிறோம். இங்கே மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது தேனிலவு கொண்டாடுவதுதான். இந்த ஒட்டுண்ணிக்கு வழங்கப்பட்ட தேசியக் கடமையா?

இலங்கையின் புலனாய்வுப் பிரிவினரால் சொந்தத் தம்பி கடத்தப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஸவின் கால்களில் விழுந்த இந்த ஒட்டுண்ணி, தனது தம்பியாரை விடுப்பதற்காக கோட்டபாயவிற்கு செய்த பிரதியுபகாரம் என்ன?

தனக்கு தெரிந்த புலிகள் பற்றிய தகவல்களையும், புலிகளுக்கு உதவியவர்களையும் காட்டிக் கொடுத்ததுதான், அந்தப் பிரதியுபகாரம். 

அந்த காலப் பகுதியில் புலிகளை மீள் உருவாக்க முயற்சிக்கிறார்கள் குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட தெய்வீகன், கோபி போன்றோரை காட்டிக் கொடுத்ததிலும் இந்த ஒட்டுண்ணிக்கு தொடர்பிருக்கின்றதோ என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது.

அதுமட்டுமா, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தினை மேற்கொண்டதாக அந்த தீர்மானத்திற்கான கூட்டுப் பொறுப்பாளிகளில் ஒருவரான மணிவண்ணன் வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார்.

குறித்த தீர்மானத்தினை மேற்கொள்வதற்கும் இந்த குதிரை கஜேந்திரன் என்று சொல்லப்படுகின்ற ஒட்டுண்ணிதான் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது.

இவ்வாறு தன்னுடைய குறுகிய நலன்களுக்காக சொந்த இனத்தை காட்டிக் கொடுத்த – எமது மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய ஒட்டுண்ணி, எமது தீவக மண்ணிலே போய் நின்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது. 

மணல் கடத்தில்கடத்தில் பேர்வழிகளுக்கும், பொது அமைப்புகளின் ஊடாக மக்களின் பணத்தை ஏப்பமிட்டவர்களுக்கும் வாக்கு கேட்கிறது.

இவர்களுக்கு போடுகின்ற வாக்கு சர்வதேசத்திற்கு அழுத்தமாக அமையுமாம். 

கடந்த 16 வருடங்களாக சர்வதேசத்திற்கு காண்பிக்கின்றோம் என்று எத்தனை தடவைகள் எங்களுடைய மக்களை உசுப்பேற்றியிரப்பீர்கள். எதனைச் சாதித்தீர்கள். மக்களுக்கு என்ன நீதியைப் பெற்றுக் கொடுத்தீர்கள்?தீவகதில் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லையாம். 

தீவகத்தில் காணப்படுகின்ற அபிவிருத்திப் திட்டங்களை பறைசாற்றுகின்ற கல்வெட்டுக்களே இந்த ஒட்டுண்ணியின் கருத்தை கேட்டு தமக்குள் சிரித்திருக்கும்.

அவை அனைத்தும் சுமந்திருப்பது எங்களின் செயலாளர் நாயகத்தின் பெயரை என்பது அவற்றிற்கு தெரியும்.

எனவே எமது மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது தேனிலவு கொண்டாடிய ஒட்டுண்ணி குதிரை கஜேந்திரன்; கடுமையாக சாடிய ஈ.பி.டி.பி தமிழ் மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய செல்வராஜா கஜேந்திரன் என்னும் ஒட்டுண்ணி, தீவக மண் தொடர்பில் இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.அண்மையில் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று மேற்கொண்ட ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில், எம்மீதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீதும் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீகக் கடப்பாடு எமக்கு இருக்கின்றது.குறிப்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வேலணை பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பாக சில உண்மைகளை எமது மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.உண்மையிலேயே, நேர்மையான அரசியல் செய்கின்றவர்ளாக இருந்தால், தீவக மக்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்களாக இருந்திருந்தால், கிராமங்களின் அபிவிருத்தியை அடிப்படையாக கொண்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தீவக மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக பேசியிருக்க வேண்டும். தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் பற்றி பிரஸ்தாபித்திருக்க வேண்டும்.ஆனால், எமது செயலாளர் நாயகம் தொடர்பாக அபாண்டமான சேறடிப்புக்களை முன்வைத்திருக்கின்றார்.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் கோட்டையாக விளங்கி வருகின்ற தீவகப் பிரதேசத்தில், எமது வாக்கு வங்கிகளை சிதறடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே குறித்த சேறடிப்பு முன்வைக்கப்பட்டிருக்கின்றது.அதாவது, குதிரை கஜேந்திரன் என்று சொல்லப்படுகின்ற ஒட்டுண்ணி தீவக மண்ணிலே வந்து நீலிக் கண்ணீர் வடித்துவிட்டு சென்றிருக்கின்றது. கடந்த காலங்களில் எங்களுடைய மக்களுக்கு அவலங்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்ந்த அந்த ஒட்டுண்ணி யார் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ளவார்கள்.கிராமங்கள் தோறும் சென்று இராணுவத்திற்கு ஆள் சேர்துக் கொடுத்தாக இன்று ஜே.வி.பி. யினர் மீது குற்றஞ்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.அதற்கான ஜே.வி.பி. யினருக்கு கொம்பு சீவிவிட்ட பெருமை இந்த ஒட்டுண்ணிக்கு இருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இறுதி யுத்த மேகங்கள் வன்னி நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில் 40 ஆயிரம் சவப் பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்று நாடாளுமன்றத்தில் பேசியதன் மூலம், தென்னிலங்கையிலே இருக்கின்ற பேரினவாத தரப்புக்களை உசுப்பேற்றி விட்டு நாட்டை விட்டு ஓடித் தப்பியதுதான் போராட்டத்திற்கு இந்த ஒட்டுண்ணி செய்த அதிஉச்ச பட்சமான தியாகம்.போகும்போதும் சும்மா செல்லவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சொகுச வாகனத்தை சொந்தமாக்கி கொள்வதற்கு 35 இலட்சம் ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து, புலிகளின் வாகனங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் ஊடாக புலிகளிடம் இருந்து அந்தப் பணத்தினைப் பெற்றுக் சொகுசு வாகனத்தையும் விற்று அதன்மூலம் கிடைத்த பல இலட்சம் ரூபாய்களையும் சுருட்டிக கெர்ண்டு ஓடியதுதான் இந்த ஒட்டுண்ணி தமிழர்கள் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்பு.வன்னியிலே எங்களுடைய மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, வனாந்தாரங்களிலே போக்கிடம் தெரியாமல் அலைந்து கொண்டிருந்த போது, சுவிஸ்லாந்தில் இந்த ஒட்டுண்ணி தேனிலவு கொண்டிடாக் கொண்டு இருந்துவிட்டு, இப்போது கதை சொல்கிறது.தன்னுடைய தேசியத் தலைமை தேசியக் கடமையை நிறைவேற்றுவதற்காக தன்னை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததாம். நாம் கேட்கிறோம். இங்கே மக்கள் செத்துக் கொண்டிருந்தபோது தேனிலவு கொண்டாடுவதுதான். இந்த ஒட்டுண்ணிக்கு வழங்கப்பட்ட தேசியக் கடமையாஇலங்கையின் புலனாய்வுப் பிரிவினரால் சொந்தத் தம்பி கடத்தப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஸவின் கால்களில் விழுந்த இந்த ஒட்டுண்ணி, தனது தம்பியாரை விடுப்பதற்காக கோட்டபாயவிற்கு செய்த பிரதியுபகாரம் என்னதனக்கு தெரிந்த புலிகள் பற்றிய தகவல்களையும், புலிகளுக்கு உதவியவர்களையும் காட்டிக் கொடுத்ததுதான், அந்தப் பிரதியுபகாரம். அந்த காலப் பகுதியில் புலிகளை மீள் உருவாக்க முயற்சிக்கிறார்கள் குற்றச்சாட்டில் கொலை செய்யப்பட்ட தெய்வீகன், கோபி போன்றோரை காட்டிக் கொடுத்ததிலும் இந்த ஒட்டுண்ணிக்கு தொடர்பிருக்கின்றதோ என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது.அதுமட்டுமா, 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தினை மேற்கொண்டதாக அந்த தீர்மானத்திற்கான கூட்டுப் பொறுப்பாளிகளில் ஒருவரான மணிவண்ணன் வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார்.குறித்த தீர்மானத்தினை மேற்கொள்வதற்கும் இந்த குதிரை கஜேந்திரன் என்று சொல்லப்படுகின்ற ஒட்டுண்ணிதான் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது.இவ்வாறு தன்னுடைய குறுகிய நலன்களுக்காக சொந்த இனத்தை காட்டிக் கொடுத்த – எமது மக்களுக்கு அவலத்தை ஏற்படுத்திய ஒட்டுண்ணி, எமது தீவக மண்ணிலே போய் நின்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றது. மணல் கடத்தில்கடத்தில் பேர்வழிகளுக்கும், பொது அமைப்புகளின் ஊடாக மக்களின் பணத்தை ஏப்பமிட்டவர்களுக்கும் வாக்கு கேட்கிறது.இவர்களுக்கு போடுகின்ற வாக்கு சர்வதேசத்திற்கு அழுத்தமாக அமையுமாம். கடந்த 16 வருடங்களாக சர்வதேசத்திற்கு காண்பிக்கின்றோம் என்று எத்தனை தடவைகள் எங்களுடைய மக்களை உசுப்பேற்றியிரப்பீர்கள். எதனைச் சாதித்தீர்கள். மக்களுக்கு என்ன நீதியைப் பெற்றுக் கொடுத்தீர்கள்தீவகதில் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படவில்லையாம். தீவகத்தில் காணப்படுகின்ற அபிவிருத்திப் திட்டங்களை பறைசாற்றுகின்ற கல்வெட்டுக்களே இந்த ஒட்டுண்ணியின் கருத்தை கேட்டு தமக்குள் சிரித்திருக்கும்.அவை அனைத்தும் சுமந்திருப்பது எங்களின் செயலாளர் நாயகத்தின் பெயரை என்பது அவற்றிற்கு தெரியும்.எனவே எமது மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement