சரிகமப சீனியர் சீசன் 5 இல் கடந்த வாரம் இடம்பெற்ற சுற்றில் இலங்கையைச் சேர்ந்த தரங்கினி தனது மெனமைக்குரலுக்கு ஏற்ற பாடலைப் பாடி கோல்டன் பெவோர்மன்சைத் தட்டித் தூக்கியுள்ளார்
தமிழகத்தின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதில் இலங்கையைச் சேர்ந்த பாடகர்களான சபேசன், தரங்கினி ஆகியோர் தமது இசைத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சீனியர் சீசன் 5 இன் கடந்த வார சுற்று இனிய இசை சங்கமம் என்ற ரீதியில் இடம்பெற்றது.
இந்த சுற்றுகடந்த சீசனில் கலந்துகொண்ட பாடகர்கள், இந்த சுற்றின் பாடகர்களுடன் இணைந்து பாடுவதாக அமைந்தது.
இந்த சுற்றிலேயே இலங்கையைச் சேர்ந்த தரங்கினி, பாடகர் சரத்துடன் இணைந்து “குறுக்கு சிரித்தவளே” என்ற பாடலைப் பாடியுள்ளார்.
பாடலைப் பாடி முடிந்ததும் நடுவர்கள் தரங்கினி மற்றும் சரத்திற்கு சிறந்த கமன்ஸ்களைத் தெரிவித்தனர். அதிலும் தரங்கினி தனது மென்மையான குரலால் அனைவரையும் ஈர்த்திருந்தார்.
தரங்கினியின் மென்மைக் குரலிற்கு ஏற்ற பாடலை சிறப்பாகப் பாடி நடுவர்களை ஈர்த்து கேல்டன் பெவோர்மன்ஸைத் தட்டித்தூக்கியுள்ளார்.
அத்துடன் கடந்த சீசன் பாடகர்களில் தனக்குப் பிடித்த பாடகரான சரத்துடன் இணைந்து தான் பாடியது மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளதாகவும் தரங்கினி தெரிவித்திருந்தார்.
இதேவேளை இந்த சுற்றில் சபேசனும் சிறந்த பாடலைப் பாடி கோல்டன் பெற்றிருந்தார். தொடர்ச்சியாக இலங்கையைச் சேர்ந்த சபேசனும் தரங்கினியும் சிறந்த முறையில் இசையை வெளிப்படுத்தி நடுவர்களைக் கவரந்து வருவது இலங்கைக்குப் பெருமை சேர்க்கிறது எனலாம்.
மென்மைக்குரலால் ஈர்த்த தரங்கினி; இசை சங்கமம் சுற்றில் கோல்டனைத் தட்டினார் சரிகமப சீனியர் சீசன் 5 இல் கடந்த வாரம் இடம்பெற்ற சுற்றில் இலங்கையைச் சேர்ந்த தரங்கினி தனது மெனமைக்குரலுக்கு ஏற்ற பாடலைப் பாடி கோல்டன் பெவோர்மன்சைத் தட்டித் தூக்கியுள்ளார் தமிழகத்தின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப இசை நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த பாடகர்களான சபேசன், தரங்கினி ஆகியோர் தமது இசைத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீனியர் சீசன் 5 இன் கடந்த வார சுற்று இனிய இசை சங்கமம் என்ற ரீதியில் இடம்பெற்றது. இந்த சுற்றுகடந்த சீசனில் கலந்துகொண்ட பாடகர்கள், இந்த சுற்றின் பாடகர்களுடன் இணைந்து பாடுவதாக அமைந்தது. இந்த சுற்றிலேயே இலங்கையைச் சேர்ந்த தரங்கினி, பாடகர் சரத்துடன் இணைந்து “குறுக்கு சிரித்தவளே” என்ற பாடலைப் பாடியுள்ளார். பாடலைப் பாடி முடிந்ததும் நடுவர்கள் தரங்கினி மற்றும் சரத்திற்கு சிறந்த கமன்ஸ்களைத் தெரிவித்தனர். அதிலும் தரங்கினி தனது மென்மையான குரலால் அனைவரையும் ஈர்த்திருந்தார். தரங்கினியின் மென்மைக் குரலிற்கு ஏற்ற பாடலை சிறப்பாகப் பாடி நடுவர்களை ஈர்த்து கேல்டன் பெவோர்மன்ஸைத் தட்டித்தூக்கியுள்ளார். அத்துடன் கடந்த சீசன் பாடகர்களில் தனக்குப் பிடித்த பாடகரான சரத்துடன் இணைந்து தான் பாடியது மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளதாகவும் தரங்கினி தெரிவித்திருந்தார். இதேவேளை இந்த சுற்றில் சபேசனும் சிறந்த பாடலைப் பாடி கோல்டன் பெற்றிருந்தார். தொடர்ச்சியாக இலங்கையைச் சேர்ந்த சபேசனும் தரங்கினியும் சிறந்த முறையில் இசையை வெளிப்படுத்தி நடுவர்களைக் கவரந்து வருவது இலங்கைக்குப் பெருமை சேர்க்கிறது எனலாம்.