விமானம் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், பயணி ஒருவர் அமெரிக்காவிற்கு அழிவு, ட்ரம்ப்பிற்கு அழிவு என்று கூச்சலிட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஈஸிஜெட் (EasyJet) விமானம் ஒன்று, லண்டன் லூடன் விமான நிலையத்திலிருந்து கிளாஸ்கோவிற்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்டது.
இந்தப் பயணத்தின் போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், கோஷமிட்டு பயணத்திற்கு இடையூறு விளைவித்துள்ளார். இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியுள்ளது.
காணொளி வெளிவந்தததையடுத்து ஸ்கொட்லாந்து பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் விமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூச்சலிட்ட குற்றச்சாட்டில், கிளாஸ்கோவை வந்தடைந்த விமானத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பரவும் காணொளியில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய நபர், 'அமெரிக்காவிற்கு அழிவு, ட்ரம்ப்பிற்கு அழிவு' என்று கூச்சலிட்டுள்ளார் என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர், கிளாஸ்கோ நகர எல்லையில் உள்ள பைஸ்லி ஷெரீப் நீதிமன்றத்தில், நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போது குறித்த நபரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக விமான விபத்துக்களும் விமானம் தொடர்பான பிரச்சினைகளும் பல இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘அமெரிக்காவிற்கு அழிவு’ ‘ட்ரம்பிற்கு அழிவு’; பறக்கும் விமானத்தில் கத்திய பயணி கைது விமானம் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், பயணி ஒருவர் அமெரிக்காவிற்கு அழிவு, ட்ரம்ப்பிற்கு அழிவு என்று கூச்சலிட்ட காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஈஸிஜெட் (EasyJet) விமானம் ஒன்று, லண்டன் லூடன் விமான நிலையத்திலிருந்து கிளாஸ்கோவிற்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு பயணம் மேற்கொண்டது. இந்தப் பயணத்தின் போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், கோஷமிட்டு பயணத்திற்கு இடையூறு விளைவித்துள்ளார். இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியுள்ளது. காணொளி வெளிவந்தததையடுத்து ஸ்கொட்லாந்து பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் விமான பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூச்சலிட்ட குற்றச்சாட்டில், கிளாஸ்கோவை வந்தடைந்த விமானத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் பரவும் காணொளியில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய நபர், 'அமெரிக்காவிற்கு அழிவு, ட்ரம்ப்பிற்கு அழிவு' என்று கூச்சலிட்டுள்ளார் என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர், கிளாஸ்கோ நகர எல்லையில் உள்ள பைஸ்லி ஷெரீப் நீதிமன்றத்தில், நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது குறித்த நபரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அண்மைக்காலமாக விமான விபத்துக்களும் விமானம் தொடர்பான பிரச்சினைகளும் பல இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.