திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கூடு கோபுரத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கோதுமை மாவு ஏற்றி கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கெண்டனரும், கொழும்பிலிருந்து வாகன உதிரிப்பாகங்களை ஏற்றி கந்தளாய் 92வது கட்டைப்பகுதிக்குச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வேன் சாரதியும், வேனில் துணைக்கு வந்த மற்றொருவரும் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெண்டனர் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது .
மேலும், விபத்துக்கு வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் முக்கிய காரணமாக இருந்ததாகவும்,
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்; நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் கந்தளாயில் இருவர் படுகாயம் திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கூடு கோபுரத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.திருகோணமலையிலிருந்து கோதுமை மாவு ஏற்றி கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கெண்டனரும், கொழும்பிலிருந்து வாகன உதிரிப்பாகங்களை ஏற்றி கந்தளாய் 92வது கட்டைப்பகுதிக்குச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த வேன் சாரதியும், வேனில் துணைக்கு வந்த மற்றொருவரும் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கெண்டனர் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது .மேலும், விபத்துக்கு வேன் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் முக்கிய காரணமாக இருந்ததாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.விபத்து அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.