ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுனாமி அலை 30 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சுனாமி அலைகள் காரணமாக இதுவரை எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என ஜப்பானின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான ஜப்பானிய கடற்கரையில் உள்ள 133 நகர சபைகளிலிருந்து 900,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நிலைமை காரணமாக இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் ரஸ்யாவின் யெலிசோவோ மாவட்டத்தில் 3-4 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்குள்ளும் நுழைந்த சுனாமி அலைகள் இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தலா ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுனாமி அலை 30 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சுனாமி அலைகள் காரணமாக இதுவரை எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என ஜப்பானின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான ஜப்பானிய கடற்கரையில் உள்ள 133 நகர சபைகளிலிருந்து 900,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இதேவேளை, இந்த நிலைமை காரணமாக இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் ரஸ்யாவின் யெலிசோவோ மாவட்டத்தில் 3-4 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஹவாய் மற்றும் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.