களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை அறுத்துள்ளது.
லொறியில் வடம் மாட்டிக்கொண்டதால் தொலைத்தொடர்பு வலையமைப்பு வடம் இணைக்கப்பட்டிருந்த தூண் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது.
அத்துடன், தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்கள் வீதியின் குறுக்காக கிடப்பதால் இப் பகுதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
மட்டக்களப்பில் தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை அறுத்த லொறி. களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை அறுத்துள்ளது. லொறியில் வடம் மாட்டிக்கொண்டதால் தொலைத்தொடர்பு வலையமைப்பு வடம் இணைக்கப்பட்டிருந்த தூண் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது. அத்துடன், தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்கள் வீதியின் குறுக்காக கிடப்பதால் இப் பகுதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.