• Mar 31 2025

உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வழக்குகள் - உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chithra / Mar 28th 2025, 1:42 pm
image


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தினால் பரிசீலனைக்கு  எடுக்கப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில் சட்டமா அதிபர் தலைமையில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியை  வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளோடும் தேர்தல் ஆணையாகத்தின் முடிவெடுக்கக் கூடியவர்களோடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி சுமுகமான முறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விடயங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது. 

அந்த முடிவிற்கு பின்னராக வரும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி காலை 10 மணி அளவில் இந்த வழக்குகள் மீளவும் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


உள்ளூராட்சி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வழக்குகள் - உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தினால் பரிசீலனைக்கு  எடுக்கப்பட்டது.இந்த விசாரணையின் முடிவில் சட்டமா அதிபர் தலைமையில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியை  வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளோடும் தேர்தல் ஆணையாகத்தின் முடிவெடுக்கக் கூடியவர்களோடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தி சுமுகமான முறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விடயங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது. அந்த முடிவிற்கு பின்னராக வரும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி காலை 10 மணி அளவில் இந்த வழக்குகள் மீளவும் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement