• Mar 31 2025

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

Chithra / Mar 28th 2025, 1:34 pm
image

 


நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கல்முனை பேருந்து நிலையம், பொது நூலகம் , அம்மன் கோவில் வீதி உட்பட பல பகுதிகளில்     சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பாதசாரிகளுக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் படிக்கட்டுக்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கினர்.

மேலும் இந்நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  எச். சமூத்திர ஜீவ கண்கானிப்பின் கீழ் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன்  புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை ஆரம்பம்  நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை இன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கல்முனை பேருந்து நிலையம், பொது நூலகம் , அம்மன் கோவில் வீதி உட்பட பல பகுதிகளில்     சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பாதசாரிகளுக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் படிக்கட்டுக்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கினர்.மேலும் இந்நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  எச். சமூத்திர ஜீவ கண்கானிப்பின் கீழ் இடம்பெற்று வருகின்றது.அத்துடன் எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன்  புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement