லொறியுடன் சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (2) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த சொகுசு பஸ் ஒன்று, அதே வழியில் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சொகுசு பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியை மோதித்தள்ளிய சொகுசு பஸ் ஒருவர் உயிரிழப்பு - 7 பேர் காயம் லொறியுடன் சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (2) அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த சொகுசு பஸ் ஒன்று, அதே வழியில் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் சொகுசு பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.