• May 17 2024

சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பும் மாஃபியாக்களை எதிர்க்க வேண்டும் : மனுஷ நாணயக்கார! samugammedia

Tamil nila / Aug 25th 2023, 2:36 pm
image

Advertisement

அப்பாவி மக்களை சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளில் பணியாளர்களாக வேலைக்கு அனுப்பும் மாஃபியாக்களுக்கு இந்நாட்டு பேராசிரியர்களும் அரசியல்வாதிகளும் துணை நிற்பது கவலைக்குரிய விடயம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மனித வள மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மாஃபியாவுக்கு துணை நிற்பவர்களிடமிருந்து நாட்டுக்கு எந்த விதமான சேவையும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்நாட்டு தொழில் சந்தையானது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது.

அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவரும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு இன்று வேலை வாய்ப்புகள் இல்லை.

கொழும்பில் உள்ள பிரதான நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு செய்யபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

ஒரு நாள் ஒரு அரச பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெண் பேராசிரியர் ஒருவர் அங்கு காணப்படும் நடவடிக்கைகள் குறித்து என்னிடம் சவால் விடுத்தார். மாணவ சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் தெரிவித்தார்.

தற்போது காணப்படும் கீழ்த்தரமான கல்வி முறைமையின் ஊடாக மக்கள் சரியான பாதைக்கு இட்டுச் செல்லப்படவில்லை.

நன்கு கற்றவர்கள் உலகை பரந்த எண்ணத்தோடு பார்க்க வேண்டும்.

சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு பணியாளர்களாக மக்கள் அனுப்பப்படுவதை பேராசிரியர்கள் ஊக்குவிக்க கூடாது " என தெரிவித்தார்.


சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளில் வேலைக்கு அனுப்பும் மாஃபியாக்களை எதிர்க்க வேண்டும் : மனுஷ நாணயக்கார samugammedia அப்பாவி மக்களை சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளில் பணியாளர்களாக வேலைக்கு அனுப்பும் மாஃபியாக்களுக்கு இந்நாட்டு பேராசிரியர்களும் அரசியல்வாதிகளும் துணை நிற்பது கவலைக்குரிய விடயம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.மனித வள மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மாஃபியாவுக்கு துணை நிற்பவர்களிடமிருந்து நாட்டுக்கு எந்த விதமான சேவையும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,இந்நாட்டு தொழில் சந்தையானது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது.அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளிவரும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு இன்று வேலை வாய்ப்புகள் இல்லை.கொழும்பில் உள்ள பிரதான நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு செய்யபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.ஒரு நாள் ஒரு அரச பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெண் பேராசிரியர் ஒருவர் அங்கு காணப்படும் நடவடிக்கைகள் குறித்து என்னிடம் சவால் விடுத்தார். மாணவ சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் தெரிவித்தார்.தற்போது காணப்படும் கீழ்த்தரமான கல்வி முறைமையின் ஊடாக மக்கள் சரியான பாதைக்கு இட்டுச் செல்லப்படவில்லை.நன்கு கற்றவர்கள் உலகை பரந்த எண்ணத்தோடு பார்க்க வேண்டும்.சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு பணியாளர்களாக மக்கள் அனுப்பப்படுவதை பேராசிரியர்கள் ஊக்குவிக்க கூடாது " என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement