• Oct 05 2024

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஜனாதிபதிக்கு மகஜர்..!

Sharmi / Oct 4th 2024, 2:41 pm
image

Advertisement

புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பருத்தித்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு ஆதரவாக, பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் கொட்டடி கடற்கரையில நேற்று(03)  மாலை  இடம்பெற்றது.

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், எல்லைதாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடுத்து நிறுத்த வேண்டும், சுருக்கு வலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும், போதைப்பொருள் ஒழிப்பு, 16 வயது வரை கட்டாய கல்வி உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனுர குமார திசநாயக்கவுக்கு வடமாகாண மீனவர்கள் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.

இப் பொதுக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரம், சர்வ மதத் தலைவர்கள், வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.


வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஜனாதிபதிக்கு மகஜர். புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பருத்தித்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு ஆதரவாக, பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் கொட்டடி கடற்கரையில நேற்று(03)  மாலை  இடம்பெற்றது.வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், எல்லைதாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடுத்து நிறுத்த வேண்டும், சுருக்கு வலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும், போதைப்பொருள் ஒழிப்பு, 16 வயது வரை கட்டாய கல்வி உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனுர குமார திசநாயக்கவுக்கு வடமாகாண மீனவர்கள் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரத்திடம் வழங்கி வைக்கப்பட்டது.இப் பொதுக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரம், சர்வ மதத் தலைவர்கள், வட மாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement