• Jul 22 2025

மஹிந்தானந்த, நளின் மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Chithra / Jul 21st 2025, 11:18 am
image


சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக் கூறி இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன மூன்று பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

எனினும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனைகள் காரணமாக, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணை நாளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

மஹிந்தானந்த, நளின் மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக் கூறி இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன மூன்று பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.எனினும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனைகள் காரணமாக, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணை நாளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement