• Sep 21 2024

13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்- அங்கஜன் தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Jun 29th 2023, 5:35 pm
image

Advertisement

13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்  என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  சுட்டிக்காட்டியுள்ளார். 

இன்று 29) மாலை கோண்டாவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் நலன்பேணும் அமைப்பின் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரை ஆற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 21 தடவையும் அதன் பின்னரும் யாழ்ப்பாணத்திற்கு அதிக தடவை விஜயம் செய்தவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  உள்ளார்.

நான் ஹீலங்கா சுதந்திரக் கட்சியைத் தெரிவு செய்தது சரியென்று அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவுகள் குறித்து நிற்கின்றன

தமிழ் மக்களின் அபிலாசைகளை விளங்குவதற்காக சகல தரப்பினரையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் பிரச்சினையையும் விளங்கி கட்சியை முன்னிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற  சர்வகட்சி மாநாட்டில் தமிழ் மக்களின் காணிகளை மறுபடியும் வழங்குமாறும் , காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்குமாறும் , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்

இத்துடன் தெற்கிலுள்ள மக்களைப் போல் வடகிழக்கில் வாழும் மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவ் மாநாட்டில் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.


13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்- அங்கஜன் தெரிவிப்பு samugammedia 13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென மைத்திரிபால சிறிசேனா வலியுறுத்தியுள்ளார்  என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  சுட்டிக்காட்டியுள்ளார். இன்று 29) மாலை கோண்டாவிலில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் நலன்பேணும் அமைப்பின் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரை ஆற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 21 தடவையும் அதன் பின்னரும் யாழ்ப்பாணத்திற்கு அதிக தடவை விஜயம் செய்தவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  உள்ளார்.நான் ஹீலங்கா சுதந்திரக் கட்சியைத் தெரிவு செய்தது சரியென்று அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவுகள் குறித்து நிற்கின்றனதமிழ் மக்களின் அபிலாசைகளை விளங்குவதற்காக சகல தரப்பினரையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் பிரச்சினையையும் விளங்கி கட்சியை முன்னிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.13 ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற  சர்வகட்சி மாநாட்டில் தமிழ் மக்களின் காணிகளை மறுபடியும் வழங்குமாறும் , காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்குமாறும் , அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்இத்துடன் தெற்கிலுள்ள மக்களைப் போல் வடகிழக்கில் வாழும் மக்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவ் மாநாட்டில் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement