• Sep 21 2024

இலங்கையில் ஐஸ்கிறீம் விற்பனையில் முக்கிய மாற்றம்! samugammedia

Chithra / Jul 26th 2023, 11:09 am
image

Advertisement

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் அட்டையை அகற்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும் என பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையை பொலித்தீன் அற்ற பிரதேசமாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிஸ்கட் விற்பனையில் பொலித்தீன் கவரை அகற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இந்த விடயம் பேசப்பட்டதுடன், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்யுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும பரிந்துரைத்துள்ளார். 

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மிருகக்காட்சிசாலையில் உள்ள கடைக்காரர்களிடம் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாகவும், ஐஸ்கிரீம் விற்பனையின் போது அகற்றப்படும் பொலித்தீன் கவர்களை சேகரித்து விற்பனையாளர்கள் கட்டுப்பாட்டு துறைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஐஸ்கிறீம் விற்பனையில் முக்கிய மாற்றம் samugammedia தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் அட்டையை அகற்றி ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும் என பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்துள்ளார்.மிருகக்காட்சிசாலையை பொலித்தீன் அற்ற பிரதேசமாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிஸ்கட் விற்பனையில் பொலித்தீன் கவரை அகற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவில் இந்த விடயம் பேசப்பட்டதுடன், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்யுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் மான்னப்பெரும பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.மிருகக்காட்சிசாலையில் உள்ள கடைக்காரர்களிடம் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதாகவும், ஐஸ்கிரீம் விற்பனையின் போது அகற்றப்படும் பொலித்தீன் கவர்களை சேகரித்து விற்பனையாளர்கள் கட்டுப்பாட்டு துறைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement