• Nov 24 2024

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த தயார்- சித்தார்த்தன்!

Tamil nila / Jun 20th 2024, 9:17 pm
image

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த தயார் என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் மிக நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் முறைமை 2017ம் ஆண்டு மாற்றப்பட்டு தொகுதி நிர்ணய சபை அமைக்கப்பட்டு அச்சபை ஒரு தொகுதி நிர்ணய அறிக்கையை அறிக்கையிட்டிருந்தது. 

அவ்வறிக்கை பாராளுமன்றத்தில் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது முழுமையாக நிராகரிக்கப்பட்டது.  

தொகுதி நிர்ணய அறிக்கை நிராரிக்கப்பட்ட காரணத்தினால் இதுவரை தேர்தல் நடைபெறாமலிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த தொகுதி நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சரே அதற்கு எதிராகத்தான் வாக்களித்தார். 

ஆவர் மாத்திரமல்ல முழு சபையுமே அதற்கெதிராகத்தான் வாக்களித்தது. அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்கள், 2017ம் ஆண்டு திருத்தத்தை நீக்கிவிட்டு தேர்தலை நடாத்த முடியுமென்று ஒரு தனிநபர் பிரேரணையைக் கொண்டுவந்ததோடு, சுப்ரீம் கோர்ட் கூட அதை சிறிய திருத்தத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. 

அது மாத்திரமல்ல இப்போது பிரதமராக இருக்கும் தினேஸ் குணவர்தன அவர்கள் அப்போது அமைச்சராக இருந்தபோது அவர் தலைமை வகித்த ஒரு தெரிவுக்குழு கூட தேர்தலை சிறிய திருத்தத்துடன் நடாத்தலாம் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தது. 

இப்போது ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது. முக்கிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதற்கு அல்லது மாகாணசபை முறைமையை தொடர்வதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலே இம் மூவருமாக திருத்தத்தைக் கொண்டுவந்து மாகாணசபைத் தேர்தலை நடத்தி மாகாணசபைகளை இயங்கச் செய்ய வேண்டும். 

நான் கூறவில்லை. மாகாணசபை முடிந்த முடிவு என்று, அதன்மூலம் வரக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் திருப்தியானது என்று நான் கூறவில்லை. ஆனாலும் அரசியலமைப்பிலே எழுத்திலே இருக்கக்கூடிய ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றுதான் நாம் கேட்கின்றோம். இதைச் செய்வதன் மூலம் கொஞ்சமேனும் அதிகாரப்பரவலாக்கல் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டும். 

அந்த விடயம் இருக்கிறது. அது முன்னேற்றப்பட வேண்டும் என்ற விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டு இருக்கும். ஆகவே, இருப்பதையும் இல்லாமலாக்கிவிட்டு பழையபடி முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது. ஆகவே மாகாணசபை முறைமையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம். மூன்று முக்கிய வேட்பாளர்களும் அதற்கு சம்மதிக்கின்றார்கள். ஆகவே அதைச் செய்ய வேண்டும்.

ஆயினும், ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் இதைப் பிற்போட்டுக் கொண்டு செய்யாமல் விடுகின்றது. அல்லது ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு வருகின்றது. சட்டம் ஒழுங்கு என்பார்கள், முழுமையாக செய்வோம் என்பார்கள்.  இரண்டை தரமுடியாது என்பார்கள். இப்படியாக காரணங்களை கூறிக் கொண்டு இருப்பார்கள். 

ஆகக்குறைந்தது மாகாணசபைகளை ஆரம்பித்தால் இந்த சட்டம் ஒழுங்கு நிலம் இவைகள் சம்பந்தமாக படிப்படியாகவேனும் நீங்கள் செய்வதற்கு வாய்ப்பிருக்கும். நிலத்தைத் தருவதிலேயோ சட்டம் ஒழுங்கை தருவதிலேயே எந்த பிரச்சினையும் இல்லை. சட்டம் ஒழுங்கு என்று சொல்லுகின்றபோது ஏதோ மற்றைய நாடுகளில் இருக்கக்கூடியது மாதிரி இந்தியாவிலே இருக்கக்கூடியது மாதிரி தமிழ் நாட்டு பொலிஸ் மாதிரி ஏதோ வடகிழக்கிற்கு என்று ஒரு பொலிஸ் வந்துவிடும் என்பது அல்ல. 

அரசியல் யாப்பிலேயே இருக்கின்றது. அதிலே இருப்பது வடக்கு கிழக்குக்கு ஒரு பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்படுவார். அவரின் கீழ் அந்த பொலிஸ் இருக்கும். உண்மையாகப் பார்க்கின்றபோது அது இலங்கைப் பொலிஸ் படையின் ஒரு பகுதிதான். ஒரு தனிப்படை அல்ல. இதை அவர்கள் தெரிந்துகொண்டேதான் சொல்லுகின்றார்கள். 

இந்த நாட்டிலே தமிழ் மக்கள் தங்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்திலே ஒரு சரியான அதிகாரப்பரவலாக்கலைக் வழங்குவதன் மூலம்தான் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நாங்கள் காண முடியும். ஏனென்றால் எங்களைப் பொறுத்தமட்டில் வடகிழக்கிலே பொருளாதார ரீதியாகக்கூட எந்த வளர்ச்சியும் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது என்பதுதான்  உண்மை. 

புலம்பெயர் தமிழர்கள் பலர் இங்கு தங்களுடைய முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருந்தாலும், இன்று அவர்களுக்கு ஒரு மனப்பயம்  உள்ளது. தங்களுடைய முதலுக்கு என்ன ஆகும் என்ற ஒரு கேள்வி உள்ளது. அது மாத்திரமல்ல நான் அறிய என்னுடைள நண்பர் ஒருவர் இங்கு முதலீடு செய்ய முயன்றபோது கொழும்பிலே அவருக்கு பல தடைகள் விதிக்கப்பட்டது. 

கடைசியாக அவரிடம் அங்கு இருந்த ஒரு அதிகாரி கூறினாராம், நீ ஏன் இந்த முதலீட்டை தெற்கிலே செய்ய முடியாது? என்று. இப்படியான விடயங்களை நீங்கள் நிற்பாட்ட வேண்டும். அதற்கான முழுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நல்லெண்ணத்தை எங்களுடைய தமிழ் மக்கள் மத்தியிலே விதைக்க முடியும். 

ஆகக்குறைந்தது இந்த மாகாணசபை முறைமையை நீங்கள் மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையை, அதாவது சுமந்திரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ஏற்றுக்கொண்டு இந்த சபையிலே விவாதித்து வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை நீங்கள் கொடுக்க முடியும். 

இந்த சபை இந்த கட்சிகள் அனைத்துமே ஏதோ ஒரு வழியிலே தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை நோக்கி முன்னேறுபவர்கள் என்ற ஒரு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால்தான் நீங்கள் அங்கு வந்து ஜனாதிபதித் தேர்தலில் வாக்குக் கேட்கின்றபோது அந்த மக்கள் உங்கள் பக்கம் வருவார்கள். இதை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்- என்றார். 

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த தயார்- சித்தார்த்தன் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் 13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த தயார் என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முறைமை மாற்றப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் மிக நீண்டகாலமாக நடைபெறாமல் இருக்கின்றது. தேர்தல் முறைமை 2017ம் ஆண்டு மாற்றப்பட்டு தொகுதி நிர்ணய சபை அமைக்கப்பட்டு அச்சபை ஒரு தொகுதி நிர்ணய அறிக்கையை அறிக்கையிட்டிருந்தது. அவ்வறிக்கை பாராளுமன்றத்தில் 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது முழுமையாக நிராகரிக்கப்பட்டது.  தொகுதி நிர்ணய அறிக்கை நிராரிக்கப்பட்ட காரணத்தினால் இதுவரை தேர்தல் நடைபெறாமலிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த தொகுதி நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சரே அதற்கு எதிராகத்தான் வாக்களித்தார். ஆவர் மாத்திரமல்ல முழு சபையுமே அதற்கெதிராகத்தான் வாக்களித்தது. அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுமந்திரன் அவர்கள், 2017ம் ஆண்டு திருத்தத்தை நீக்கிவிட்டு தேர்தலை நடாத்த முடியுமென்று ஒரு தனிநபர் பிரேரணையைக் கொண்டுவந்ததோடு, சுப்ரீம் கோர்ட் கூட அதை சிறிய திருத்தத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. அது மாத்திரமல்ல இப்போது பிரதமராக இருக்கும் தினேஸ் குணவர்தன அவர்கள் அப்போது அமைச்சராக இருந்தபோது அவர் தலைமை வகித்த ஒரு தெரிவுக்குழு கூட தேர்தலை சிறிய திருத்தத்துடன் நடாத்தலாம் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தது. இப்போது ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது. முக்கிய மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களும் மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதற்கு அல்லது மாகாணசபை முறைமையை தொடர்வதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலே இம் மூவருமாக திருத்தத்தைக் கொண்டுவந்து மாகாணசபைத் தேர்தலை நடத்தி மாகாணசபைகளை இயங்கச் செய்ய வேண்டும். நான் கூறவில்லை. மாகாணசபை முடிந்த முடிவு என்று, அதன்மூலம் வரக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் திருப்தியானது என்று நான் கூறவில்லை. ஆனாலும் அரசியலமைப்பிலே எழுத்திலே இருக்கக்கூடிய ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றுதான் நாம் கேட்கின்றோம். இதைச் செய்வதன் மூலம் கொஞ்சமேனும் அதிகாரப்பரவலாக்கல் நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டும். அந்த விடயம் இருக்கிறது. அது முன்னேற்றப்பட வேண்டும் என்ற விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டு இருக்கும். ஆகவே, இருப்பதையும் இல்லாமலாக்கிவிட்டு பழையபடி முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது. ஆகவே மாகாணசபை முறைமையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம். மூன்று முக்கிய வேட்பாளர்களும் அதற்கு சம்மதிக்கின்றார்கள். ஆகவே அதைச் செய்ய வேண்டும்.ஆயினும், ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் இதைப் பிற்போட்டுக் கொண்டு செய்யாமல் விடுகின்றது. அல்லது ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டு வருகின்றது. சட்டம் ஒழுங்கு என்பார்கள், முழுமையாக செய்வோம் என்பார்கள்.  இரண்டை தரமுடியாது என்பார்கள். இப்படியாக காரணங்களை கூறிக் கொண்டு இருப்பார்கள். ஆகக்குறைந்தது மாகாணசபைகளை ஆரம்பித்தால் இந்த சட்டம் ஒழுங்கு நிலம் இவைகள் சம்பந்தமாக படிப்படியாகவேனும் நீங்கள் செய்வதற்கு வாய்ப்பிருக்கும். நிலத்தைத் தருவதிலேயோ சட்டம் ஒழுங்கை தருவதிலேயே எந்த பிரச்சினையும் இல்லை. சட்டம் ஒழுங்கு என்று சொல்லுகின்றபோது ஏதோ மற்றைய நாடுகளில் இருக்கக்கூடியது மாதிரி இந்தியாவிலே இருக்கக்கூடியது மாதிரி தமிழ் நாட்டு பொலிஸ் மாதிரி ஏதோ வடகிழக்கிற்கு என்று ஒரு பொலிஸ் வந்துவிடும் என்பது அல்ல. அரசியல் யாப்பிலேயே இருக்கின்றது. அதிலே இருப்பது வடக்கு கிழக்குக்கு ஒரு பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்படுவார். அவரின் கீழ் அந்த பொலிஸ் இருக்கும். உண்மையாகப் பார்க்கின்றபோது அது இலங்கைப் பொலிஸ் படையின் ஒரு பகுதிதான். ஒரு தனிப்படை அல்ல. இதை அவர்கள் தெரிந்துகொண்டேதான் சொல்லுகின்றார்கள். இந்த நாட்டிலே தமிழ் மக்கள் தங்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்திலே ஒரு சரியான அதிகாரப்பரவலாக்கலைக் வழங்குவதன் மூலம்தான் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நாங்கள் காண முடியும். ஏனென்றால் எங்களைப் பொறுத்தமட்டில் வடகிழக்கிலே பொருளாதார ரீதியாகக்கூட எந்த வளர்ச்சியும் செய்ய முடியாத நிலைமை இருக்கிறது என்பதுதான்  உண்மை. புலம்பெயர் தமிழர்கள் பலர் இங்கு தங்களுடைய முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருந்தாலும், இன்று அவர்களுக்கு ஒரு மனப்பயம்  உள்ளது. தங்களுடைய முதலுக்கு என்ன ஆகும் என்ற ஒரு கேள்வி உள்ளது. அது மாத்திரமல்ல நான் அறிய என்னுடைள நண்பர் ஒருவர் இங்கு முதலீடு செய்ய முயன்றபோது கொழும்பிலே அவருக்கு பல தடைகள் விதிக்கப்பட்டது. கடைசியாக அவரிடம் அங்கு இருந்த ஒரு அதிகாரி கூறினாராம், நீ ஏன் இந்த முதலீட்டை தெற்கிலே செய்ய முடியாது என்று. இப்படியான விடயங்களை நீங்கள் நிற்பாட்ட வேண்டும். அதற்கான முழுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஒரு நல்லெண்ணத்தை எங்களுடைய தமிழ் மக்கள் மத்தியிலே விதைக்க முடியும். ஆகக்குறைந்தது இந்த மாகாணசபை முறைமையை நீங்கள் மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கையை, அதாவது சுமந்திரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ஏற்றுக்கொண்டு இந்த சபையிலே விவாதித்து வாக்கெடுப்பு மூலம் இதை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை நீங்கள் கொடுக்க முடியும். இந்த சபை இந்த கட்சிகள் அனைத்துமே ஏதோ ஒரு வழியிலே தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை நோக்கி முன்னேறுபவர்கள் என்ற ஒரு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால்தான் நீங்கள் அங்கு வந்து ஜனாதிபதித் தேர்தலில் வாக்குக் கேட்கின்றபோது அந்த மக்கள் உங்கள் பக்கம் வருவார்கள். இதை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்- என்றார். 

Advertisement

Advertisement

Advertisement