• Dec 21 2024

மலேரியா நோய் மீண்டும் பரவும் ஆபத்து - வெளிநாடு சென்றுவந்த இலங்கையர்களுக்கு வைத்தியர் விடுத்த அவசர எச்சரிக்கை

Chithra / Dec 20th 2024, 12:06 pm
image


இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் வெளிநாடு நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகுமாறும்  கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பொறுப்பு வைத்தியர் அருமைநாதன் நிமால் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் மலேரியா தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். 

இந்த மாதம் 12ம் திகதி ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து இங்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வந்த வேளையிலே இவர்  மலேரியா  தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் எம்மை சுற்றியுள்ள நாடுகளினால் எமக்கு ஆபத்துள்ளது. 

மாலைதீவு தவிர்ந்த  கிழக்கு மற்றும் ஆபிரிக்க, தென்னாசிய நாடுகளில் இன்னும் உள்ளது.

எனவே இலங்கையிலிருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அனுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மலேரியா நோய் மீண்டும் பரவும் ஆபத்து - வெளிநாடு சென்றுவந்த இலங்கையர்களுக்கு வைத்தியர் விடுத்த அவசர எச்சரிக்கை இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் வெளிநாடு நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகுமாறும்  கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பொறுப்பு வைத்தியர் அருமைநாதன் நிமால் தெரிவித்தார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் மலேரியா தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். இந்த மாதம் 12ம் திகதி ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து இங்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வந்த வேளையிலே இவர்  மலேரியா  தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.தற்போது இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆனால் எம்மை சுற்றியுள்ள நாடுகளினால் எமக்கு ஆபத்துள்ளது. மாலைதீவு தவிர்ந்த  கிழக்கு மற்றும் ஆபிரிக்க, தென்னாசிய நாடுகளில் இன்னும் உள்ளது.எனவே இலங்கையிலிருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அனுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement