மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மாலைதீவின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் வெளிவிவகார அமைச்சருடன் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைதீவு வெளிவிவகார அமைச்சர். மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர் எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை மாலைதீவின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் வெளிவிவகார அமைச்சருடன் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.