• Apr 26 2024

வெடி பொருட்கள் மற்றும் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது!

Tamil nila / Dec 11th 2022, 4:53 pm
image

Advertisement

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக, முல்லைத்தீவு இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 57வது படைப்பிரிவின் தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், 571 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் கம்லத் ஆகியோரின் வழிநடத்தலில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பிரதேசத்தில் தனியார் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.


இதன்போது, குறித்த வீட்டிலிருந்து 

கட்டுத்துவக்குகள் 11

இடியன் துவக்குகள் 03

T56 ரக துப்பாக்கி ரவைகள் 250

வாள்கள் 02

கத்தி 01

பட்டாசுகள் 16

பன்றி இறைச்சி 08Kg

உடும்பு தோல் 02

கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் உபகரணங்கள் 02

இடியன் துப்பாக்கி உற்பத்திக்கான பொருட்கள் 08 

என்பன மீட்கப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 31 வயதுடைய வீட்டுரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வெடி பொருட்கள் மற்றும் பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக, முல்லைத்தீவு இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 57வது படைப்பிரிவின் தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், 571 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் கம்லத் ஆகியோரின் வழிநடத்தலில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பிரதேசத்தில் தனியார் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.இதன்போது, குறித்த வீட்டிலிருந்து கட்டுத்துவக்குகள் 11இடியன் துவக்குகள் 03T56 ரக துப்பாக்கி ரவைகள் 250வாள்கள் 02கத்தி 01பட்டாசுகள் 16பன்றி இறைச்சி 08Kgஉடும்பு தோல் 02கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் உபகரணங்கள் 02இடியன் துப்பாக்கி உற்பத்திக்கான பொருட்கள் 08 என்பன மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 31 வயதுடைய வீட்டுரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement