• May 07 2024

இஸ்ரேலில், பிறந்த சிசு வயிற்றில் இரட்டை கரு!

Tamil nila / Dec 11th 2022, 4:48 pm
image

Advertisement

இஸ்ரேலிலுள்ள அஸ்ஸுட்டா மெடிக்கல் சென்டரில் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.


குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஸ்கேனில் அசாதாரணமாக குழந்தையின் வயிறு பெரிதாக இருந்தது தெரியவந்துள்ளது.


இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியுள்ளனர் மருத்துவர்கள். அதானல் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றுப்பகுதியில் கரு உருவாகி இருந்தது தெரியவந்துள்ளது.



இதனையடுத்து குழந்தை பிறக்கும்வரை கண்காணிப்பில் வைத்திருந்து பின்னர் பிறந்த குழந்தையைபல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.


அதில் குழந்தையின் வயிற்றுக்குள் பாதி வளர்ச்சியடைந்த இரட்டை கரு இருப்பதைக் கண்டறிந்தனர். கருவுக்குள் கரு இருப்பதே அரியவகை நிகழ்வு என்கிறது மருத்துவம்.ஆனால் இரட்டை கரு உருவாகி இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


ஒரு வழியாக குழந்தையின் வயிற்றுக்குள்ளிருந்த இரட்டை கருக்களையும் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.


இதுகுறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், ”அசாதாரணமான முறையில், குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகள் உருவாகி இருந்தன. இல்லாவிட்டால் அவை இரண்டுமே ஆரோக்கியமான குழந்தைகளாகவே பிறந்திருக்கும். குழந்தையின் வயிற்றுக்குள் கருவை கண்டதும் நாங்கள் ஆச்சர்யமடைந்தோம். ஆனால் அந்த கருக்கள் கற்பனை செய்யமுடியாத உருவத்தில் இருந்தன.


வயிற்றுக்குள் ஆரோக்கியமான கரு வளரும்போது, எங்கேனும் சற்று இடைவெளி இருந்தால் அந்த இடத்தில் மற்றொரு கரு புகுந்து ஆரோக்கியமான கருவுடன் சேர்ந்து வளரும். ஆனால் அவை முழுமையாக வளர்ச்சியடைவதில்லை. மேலும் அது உயிருடன் இருப்பதுமில்லை” என்று கூறியுள்ளார்.


இதேபோல் கடந்த மாதம் ஜார்க்கண்ட்டில் பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்தது கண்டறியப்பட்டு அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியது குறிப்பிடத்தக்கது.   

இஸ்ரேலில், பிறந்த சிசு வயிற்றில் இரட்டை கரு இஸ்ரேலிலுள்ள அஸ்ஸுட்டா மெடிக்கல் சென்டரில் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஸ்கேனில் அசாதாரணமாக குழந்தையின் வயிறு பெரிதாக இருந்தது தெரியவந்துள்ளது.இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியுள்ளனர் மருத்துவர்கள். அதானல் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையின் வயிற்றுப்பகுதியில் கரு உருவாகி இருந்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து குழந்தை பிறக்கும்வரை கண்காணிப்பில் வைத்திருந்து பின்னர் பிறந்த குழந்தையைபல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர்.அதில் குழந்தையின் வயிற்றுக்குள் பாதி வளர்ச்சியடைந்த இரட்டை கரு இருப்பதைக் கண்டறிந்தனர். கருவுக்குள் கரு இருப்பதே அரியவகை நிகழ்வு என்கிறது மருத்துவம்.ஆனால் இரட்டை கரு உருவாகி இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.ஒரு வழியாக குழந்தையின் வயிற்றுக்குள்ளிருந்த இரட்டை கருக்களையும் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.இதுகுறித்து குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், ”அசாதாரணமான முறையில், குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகள் உருவாகி இருந்தன. இல்லாவிட்டால் அவை இரண்டுமே ஆரோக்கியமான குழந்தைகளாகவே பிறந்திருக்கும். குழந்தையின் வயிற்றுக்குள் கருவை கண்டதும் நாங்கள் ஆச்சர்யமடைந்தோம். ஆனால் அந்த கருக்கள் கற்பனை செய்யமுடியாத உருவத்தில் இருந்தன.வயிற்றுக்குள் ஆரோக்கியமான கரு வளரும்போது, எங்கேனும் சற்று இடைவெளி இருந்தால் அந்த இடத்தில் மற்றொரு கரு புகுந்து ஆரோக்கியமான கருவுடன் சேர்ந்து வளரும். ஆனால் அவை முழுமையாக வளர்ச்சியடைவதில்லை. மேலும் அது உயிருடன் இருப்பதுமில்லை” என்று கூறியுள்ளார்.இதேபோல் கடந்த மாதம் ஜார்க்கண்ட்டில் பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 கருக்கள் இருந்தது கண்டறியப்பட்டு அதனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியது குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement