நாய் கடித்து காயங்களுக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்த நபர் ஒருவர் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முத்தையா இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
இவர், சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு குட்டி நாய் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அதன் மீது முத்தையா மிகுந்த பாசம் வைத்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியில் சென்ற இந்த நாயை தெருவில் இருந்த வெறிநாய் கடித்திருக்கிறது. பின்னர், இவரது நாய்க்கும் வெறி பிடித்திருக்கிறது. இதனால் நாயை சங்கிலியில் கட்டிப் போட்டு வைத்திருந்திருக்கிறார்.
கடந்த வாரம் முத்தையா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, சங்கிலியை அறுத்து கொண்டு வந்த நாய் அவர் மீது பாய்ந்து கடித்துள்ளது.
இதையடுத்து, நாய் கடித்தால் உடனடியாக ஊசி போடாமல் சோப்பு மட்டும் போட்டுவிட்டு அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர், இரு நாட்கள் கழித்து அவருக்கு குமட்டலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் ஒவ்வாமை என்று நினைத்துள்ளனர்.
இதையடுத்து அடுத்த நாளே அவர் தண்ணீரை பார்த்து பயந்து, நாய் போல குரைக்கவும் ஆரம்பித்தார். பின்னர், அவரை பார்த்து பயந்துபோன அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர் வரும் வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாய் கடித்து காயங்களுக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்த நபர்- நாயாக மாறி உயிரிழந்த சோகம் நாய் கடித்து காயங்களுக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்த நபர் ஒருவர் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் முத்தையா இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.இவர், சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு குட்டி நாய் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அதன் மீது முத்தையா மிகுந்த பாசம் வைத்திருந்தார்.சில மாதங்களுக்கு முன்பு வெளியில் சென்ற இந்த நாயை தெருவில் இருந்த வெறிநாய் கடித்திருக்கிறது. பின்னர், இவரது நாய்க்கும் வெறி பிடித்திருக்கிறது. இதனால் நாயை சங்கிலியில் கட்டிப் போட்டு வைத்திருந்திருக்கிறார்.கடந்த வாரம் முத்தையா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, சங்கிலியை அறுத்து கொண்டு வந்த நாய் அவர் மீது பாய்ந்து கடித்துள்ளது.இதையடுத்து, நாய் கடித்தால் உடனடியாக ஊசி போடாமல் சோப்பு மட்டும் போட்டுவிட்டு அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர், இரு நாட்கள் கழித்து அவருக்கு குமட்டலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதையும் அவர்கள் பொருட்படுத்தாமல் ஒவ்வாமை என்று நினைத்துள்ளனர்.இதையடுத்து அடுத்த நாளே அவர் தண்ணீரை பார்த்து பயந்து, நாய் போல குரைக்கவும் ஆரம்பித்தார். பின்னர், அவரை பார்த்து பயந்துபோன அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவர் வரும் வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.